This Article is From Dec 19, 2018

திருடிய பொருளை எடுத்து செல்லும் போது நடந்த சிரிப்பூட்டும் சம்பவம்!

வீடியோவில் திருடன் ஒருவன் தனது விடா முயற்சியால் ஒரு பெரிய தொலைக்காட்சி பெட்டியை தனது காருக்கு தூக்கிச் சென்றான்.

திருடிய பொருளை எடுத்து செல்லும் போது நடந்த சிரிப்பூட்டும் சம்பவம்!

வைரல் ஆன வீடியோ காட்சி

அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ் ஜியார்ஜ் என்னும் இடத்தில் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அங்குள்ள போலீசார் எடுத்து வந்தனர். அதில் ஒரு பகுதியாக மக்களிடையே பல திருட்டு சம்பவங்களின் வீடியோக்கள் பகிரப்பட்டன. 


அதில் இருந்த ஒரு வீடியோவில் திருடன் ஒருவன் தனது விடா முயற்சியால் ஒரு பெரிய தொலைக்காட்சி பெட்டியை தனது காருக்கு தூக்கிச் சென்றான். பல முறை கீழே விழுந்து இறுதியில் அதை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.


‘ ஃவோர்ட் வாஷிங்டனில் உள்ள ஓரு வீட்டில் நடந்த இந்த சம்பவம் சிசிடிவி கேமராக்களில் பதிவானது. மேலும் அந்த வீடியோ காட்சிகள் அத்திருடனின் விடாமுயற்சியை காட்டியது. இதனால் மக்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்' என போலீசார் தரப்பில் இருந்து அவ்வீடியோவுடன் பதிவையும் வெளியிட்டிருந்தனர்.


மேலும் போலீசார் தரப்பிலிருந்து இச்சம்பவம் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி நடைபெற்றது என தகவல் வெளியானது.

இணையத்தில் பகிரப்பட்டதால், இருபதாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட மக்கள் இந்த வீடியோவை பார்த்தது மட்டுமில்லாமல் அதை பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோவுக்கு பதிலளித்த பெண் ஒருவர் 'அப்பெட்டிக்குள் வெடிகுண்டு இருந்திருக்கலாம்' என அப்பதிவுக்கு பதில் கூறினார். மேலும் போலீசார் திருடனை தேடிவரும் நிலையில், திருடனின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டனர்.

Click for more trending news


.