Read in English
This Article is From Mar 16, 2019

‘திருடர்களை ஏமாற்றிய போலீஸ்’- பல கோடி ரூபாய் மதிப்புடைய ஓவியம் காக்கப்பட்ட சுவாரஸ்ய கதை!

இந்த 17 வது நூற்றாண்டு ஓவியம், கலைஞர்கள் மத்தியில் மட்டுமல்ல திருடர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாகும்.

Advertisement
விசித்திரம் Edited by

இத்தாலியின் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பீட்டர் ப்ரூகெல் தி யங்கர்ஸ் க்ரூசிஃபிகேஷன்’ என்கின்ற ஓவியத்தை, கறுப்பு சந்தையில் விற்று பணம் பார்க்கலாம் என்று ஒரு திருடர் கூட்டம் திட்டமிட்டுள்ளது.

மிகவும் பிரபலமான ஓவியங்களுக்குப் பெயர் போன் இத்தாலியில், அந்த ஓவியங்களை திருடி விற்பதற்கு பெரிய சந்தையே இருக்கிறது. 

இத்தாலியின் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பீட்டர் ப்ரூகெல் தி யங்கர்ஸ் க்ரூசிஃபிகேஷன்' என்கின்ற ஓவியத்தை, கறுப்பு சந்தையில் விற்று பணம் பார்க்கலாம் என்று ஒரு திருடர் கூட்டம் திட்டமிட்டுள்ளது. இந்த ஓவியம், இத்தாலியின் லா ஸ்பீசியா மாகாணத்தின் செயின்ட் மேரி மாக்டலென் சர்ச்சில் இருக்கிறது. அதைக் களவாட திருடர்கள் எப்படியும் முயற்சி செய்வார்கள் என்று உள்ளூர் காவல் துறை கணித்து வைத்திருந்தது. காரணம், அந்த ஓவியத்தின் மதிப்பு சுமார் 30 மில்லியன் யூரோவாகும். இது இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய் இருக்கும். 

எப்படியும் ஓவியத்தைத் தேடி திருடர்கள் வருவார்கள் என்று யூகித்திருந்த உள்ளூர் போலீஸ், புகழ்பெற்ற அந்த ஓவியத்தை நகலெடுத்து, சர்ச்சில் மாற்றி வைத்திருந்தது. அப்படி மாற்றி வைக்கப்பட்டிருந்த நகலைத்தான் திருடர் கூட்டம் ஒன்று கைப்பற்றியுள்ளது. 

ஓவியம் திருடப்பட்டதை அடுத்து, திருடியவர்களை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளது இத்தாலி போலீஸ். 

Advertisement

இந்த 17 வது நூற்றாண்டு ஓவியம், கலைஞர்கள் மத்தியில் மட்டுமல்ல திருடர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாகும். இதற்கு முன்னரும் 1979 ஆம் ஆண்டு, இந்த ஓவியத்தின் ஒரிஜினல் திருடப்பட்டது. அப்போது அதிர்ஷ்டவசமாக போலீஸ், திருடர்களைப் பிடித்தது. அப்போது முதல் ஓவியத்தைப் பாதுகாப்பதில் போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது. 


 

Advertisement
Advertisement