This Article is From Aug 02, 2018

ஸ்வீடன் நாட்டின் விலை உயர்ந்த அரச கிரீடங்கள் திருட்டு

ஸ்வீடன் நாட்டின் அரச பரம்பரையையின் கிரீடங்களை கொள்ளையர் கடத்தி சென்றுள்ளார்

ஸ்வீடன் நாட்டின் விலை உயர்ந்த அரச கிரீடங்கள் திருட்டு

ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் பகுதியில் உள்ள தேவாலையத்தில் 17ஆம் நூற்றாண்டின் அரச பரம்பரை கிரீடங்கள் வைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பார்வைக்காக கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த இரண்டு தங்க கிரீடங்களை இரண்டு கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளார்.

கிரீடங்களை கடத்த முயன்ற போது, தேவாலையத்தின் அபாய மணி ஒலித்துள்ளது. சத்தம் கேட்ட பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், கிரீடங்களை கடத்தி கொண்டு மலாரன் ஏரியில் உள்ள விரைவு படகில் ஏறி கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டதாக தேவாலையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த ஸ்டாக்ஹோம் காவல் துறையினர், இதுவரையில் கொள்ளையர்களை பிடிக்கவில்லை. தொடர்ந்து கொள்ளையர்களை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அரச பரம்பரை கிரீடங்கள் விலை உயர்ந்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போன்ற கொள்ளை சம்பவங்கள் ஸ்வீடன் நாட்டில் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.