This Article is From Dec 04, 2019

அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காயத்தை திருடிச் சென்ற திருடர்கள்

கடந்த வாரம், மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரிலிருந்து உத்தர பிரதேசத்தின் கோரக்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட போது ரூ. 20-22 லட்சம் மதிப்புள்ள 40 டன் வெங்காயம் ஏற்றிச் சென்ற டிரக் திருடப்பட்டது.

அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காயத்தை திருடிச் சென்ற திருடர்கள்

திருடப்பட்ட வெங்காயத்தின் மதிப்பு ரூ. 30,000 இருக்கும் என்று புகாரில் தெரிவித்துள்ளார் (Representational)

Mandsaur:

மத்திய பிரதேசத்தில் மாண்டரில் உள்ள தனது வயலில் அறுவடைக்கு தயாராக இருந்த ரூ. 30,000 மதிப்புள்ள வெங்காயத்தை அறுவடை செய்து திருடியுள்ளதாக விவசாயி ஒருவர் புகார் செய்துள்ளார். 

சமையலறையையும் கடந்து அரசியல் விவாதங்களிலும் தனி இடம் பிடித்துள்ளது வெங்காயம். நாடு முழுவதும்  ஒரு கிலோ 100-120 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் விலை ரூ. 150 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. 

தோட்டங்களில் மோட்டார் பம்ப் செட்டுகள்தான் காணாமல் போகும். ஆனால் இப்போது வெங்காயத்துக்கு உள்ள தேவை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காயத்தை அறுவடைசெய்து திருடியுள்ளனர் திருடர்கள். இது மத்திய பிரதேசத்தில் நடந்த 2வது சம்பவமாகும்.

விவசாயி ஜிதேந்திர குமார், ஏழு குவிண்டால் அளவுள்ள வெங்காயம் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். திருடப்பட்ட  வெங்காயத்தின் மதிப்பு ரூ. 30,000 இருக்கும் என்று புகாரில் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் உரிய மதிப்பீடு செய்து அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம், மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரிலிருந்து உத்தர பிரதேசத்தின் கோரக்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட போது ரூ. 20-22 லட்சம் மதிப்புள்ள 40 டன் வெங்காயம் ஏற்றிச் சென்ற டிரக் திருடப்பட்டது.

.