Read in English
This Article is From May 27, 2019

“மூணாவது குழந்தைக்கு ஓட்டுரிமை கொடுக்காதீங்க”- ஜனத்தொகை கட்டுப்பாட்டுக்கு ராம்தேவின் யோசனை!

"இப்படி செய்தால்தான், மூன்றாவது குழந்தையை மக்கள் பெற்றுக் கொள்ளமாட்டார்கள். அனைத்து மதத்தவரும் இதைப் பின்பற்றுவார்கள்"

Advertisement
இந்தியா Edited by

"அதேபோல பசுக்களை கொல்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட வேண்டும். இறைச்சி சாப்பிட விரும்புபவர்கள், மற்ற வகை இறைச்சிக்களை சாப்பிட்டுக் கொள்ளலாம்."

Haridwar :

யோகா குரு ராம்தேவ், ஜனத்தொகைக் கட்டுப்பாடு குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர், ‘மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைக்க, குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஓட்டுரிமை வழங்கக் கூடாது' என்ற யோசனையை முன் வைத்துள்ளார். 

அவர் மேலும் இது குறித்து விரிவாக பேசுகையில், “அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை, 150 கோடியைத் தாண்டக் கூடாது. அதற்கு மேல் மக்கள் தொகை அதிகரித்தால், அதை சமாளிக்கும் வகையில் நம்மிடம் திட்டமில்லை. அதற்கு மேல் தாங்கும் சக்தியும் நம்மிடம் இல்லை. எனவே, குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு ஓட்டுரிமையோ, தேர்தலில் போட்டியிடும் உரிமையோ அல்லது அரசின் எந்த நலத் திட்டங்களையும் அனுபவிக்கும் உரிமையோ தரப்படக் கூடாது.

இப்படி செய்தால்தான், மூன்றாவது குழந்தையை மக்கள் பெற்றுக் கொள்ளமாட்டார்கள். அனைத்து மதத்தவரும் இதைப் பின்பற்றுவார்கள். அதேபோல பசுக்களை கொல்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட வேண்டும். இறைச்சி சாப்பிட விரும்புபவர்கள், மற்ற வகை இறைச்சிக்களை சாப்பிட்டுக் கொள்ளலாம்.

Advertisement

அதேபோல மது உற்பத்தி மற்றும் விற்பனையை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். பல முஸ்லீம் நாடுகளில் மதுவிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் நாடுகளிலேயே அதற்குத் தடை விதிக்க முடியும் என்றால், சாதுக்கள் வாழ்ந்த இந்தியாவில் அதைச் செய்ய முடியாதா” என்று கருத்து தெரிவித்தார்.


 

Advertisement
Advertisement