கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஹைலைட்ஸ்
- மும்பையை சேர்ந்த 64 வயது முதியவர் 3-வது நபராக இந்தியாவில் பலியாகியுள்ளார்
- பல நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது
- மகாராஷ்டிராவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137- ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தாக்குதலில் உயிரிழப்பு 3- ஆக உள்ளது.
ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணிகள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை உறுதி செய்யத் தனியார் ஆய்வகங்களும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று மருத்துவ ஆய்வுக்கான இந்திய கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அரியானாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிரா. இங்கு 39 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
துபாயிலிருந்து மார்ச் 5-ம்தேதி மும்பைக்கு வந்த நபர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவர் தனது பயண விவரங்கள் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. மூச்சு விடுவதற்குச் சிரமம் ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
டெல்லி அருகே நொய்டாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளது. லடாக்கில் 3 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.