thiruma meets velmurugan and says thanks to him: இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வரலாறு காணாத மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு பாடுப்பட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறோம்.
அந்த வகையில், திமுக கூட்டணியின் வெற்றிக்கு மகத்தான பங்களிப்பை செய்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை நேரில் சந்தித்து எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளேன்.
அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக கூட்டணி வெற்றிக்காக வேல்முருகன் அருமையாக பணியாற்றினார். அதேபோல், விசிக போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் தொகுதியிலும் வாழ்வுரிமை கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் வெற்றிக்காக படும் பாடுப்பட்டனர்.
வன்னியர் மற்றும் இதர சமூகத்திற்கு எதிரி என்பது போல் ஒரு தோற்றத்தை ஆதாய அரசியல் செய்யும் சிலர் திட்டமிட்டு தொடர்ச்சியாக பரப்பி வந்தனர். ஆனாலும், அந்த அவதூறு பிரசாரம் முறியடிக்கப்பட்டு அனைத்து கட்சியை சார்ந்த வன்னியர் சமூக மக்களும், தலித் அல்லாத, இஸ்லாமியர் அல்லாத, கிறிஸ்துவர் அல்லாத மிக சமூக மக்களும் மனமுகந்து வாக்களித்ததன் விளைவாக தான் சிதம்பரம் தொகுதியில் நான் வெற்றி பெற முடிந்தது.
ஆனால், இந்த வெற்றி என்பது, அனைத்து சமூதாய மக்களின் நல் ஆதரவும், குறிப்பாக வன்னிய சமூதாய மக்களின் நல் ஆதரவும் கிடைத்ததின் அடிப்படையிலே இந்த வெற்றியை பெற முடிந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.