This Article is From Nov 07, 2019

தொகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் திருவள்ளூர் எம்.பி ஜெயக்குமார் ஆய்வு!

இந்த ஆய்வின் போது பல ஆண்டுகளாக சாலை பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளதற்கான காரணங்களை அதிகாரிகளிடம் திருவள்ளூர் எம்.பி கேட்டறிந்தார்.

தொகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் திருவள்ளூர் எம்.பி ஜெயக்குமார் ஆய்வு!

மக்களின் பல்வேறு குறைகள் குறித்து காலை 11.00 மணி முதல் மாலை 04:00 மணி வரை ஆய்வு நடத்தினார். 

தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல (தமிழ்நாடு) அதிகாரி பவன் குமாரை நேரில் சந்தித்து மக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து திருவள்ளூர் எம்.பி ஜெயக்குமார் நேற்றைய தினம் ஆய்வு செய்தார். 

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல (தமிழ்நாடு) அதிகாரி பவன் குமாரை கிண்டியில் உள்ள அவரது மண்டல அலுவலகத்தில் நேரில் சந்தித்து திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் செல்லக்கூடிய 

1) NH-04: மதுரவாயல்- ஸ்ரீபெரும்புதூர். 

2) NH-05: சென்னை- தடா.

3) NH-205: சென்னை-திருவள்ளூர்-திருப்பதி.

4) சென்னை பைபாஸ் சாலை: மாதவரம்-பெருங்களத்தூர்.

5) சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை.

உள்ளிட்ட மேற்கண்ட நெடுஞ்சாலைகளில் உள்ள மக்களின் பல்வேறு குறைகள் குறித்து காலை 11.00 மணி முதல் மாலை 04:00 மணி வரை ஆய்வு நடத்தினார். 

இந்த ஆய்வின் போது பல ஆண்டுகளாக சாலை பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளதற்கான காரணங்களை அதிகாரிகளிடம் திருவள்ளூர் எம்.பி கேட்டறிந்தார்.

அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி, சாலை விரிவாக்கம் செய்ய அந்ததந்த பகுதிகளில் தமிழக அரசு பட்டா மனைகளை எடுத்து தராததாலும், மின்சார கம்பங்கள் சாலையின் நடுவில் வருவதாலும், சாலைகளின் நடுவில் கோயில்கள் வருவதாலும், சரியான நேரத்தில் பணியை முடிக்க முடியவில்லை என்றனர். 

மேலும் சாலை பணிகளை உடனடியாக முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுத்தினார். இக்கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்ந்த அதிகாரிகளும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் திரு.A.G.சிதம்பரம் அவர்களும் கலந்து கொண்டனர்.
 

.