This Article is From Jan 07, 2020

20 ஆண்டுகளாக கெடாமல் புதிது போலிருக்கும் மெக்டொனால்ட் பர்கர்

ஊறுகாய் மட்டுமே வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும். ஆனால், இந்த பர்கர் மற்றும் அதன் பன் வருடக்கணக்காக கெடாமல் இருப்பதாக கூறுகிறார்.

20 ஆண்டுகளாக கெடாமல் புதிது போலிருக்கும் மெக்டொனால்ட் பர்கர்

1999இல் வாங்கப்பட்ட மெக்டொனால்ட்டு பர்க்கர்

1999இல் வாங்கப்பட்ட மெக்டொனால்ட்டு பர்க்கர் இன்று வாங்கியது போன்ற தோற்றத்துடன் இருப்பதாகவும் அதில் வைக்கப்பட்ட இறைச்சி அட்டை போன்ற வாசனை வருவதாக அதனை வாங்கிய வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

டேவிட் விப்பிள் என்ற நபர் சரியாக 20 ஆண்டுகளுக்கு முன் லோகன் நகர உட்டா விற்பனை நிலையத்திலிருந்து பர்கர் வாங்கியதாக கூறுகிறார். என்சைம்கள் பற்றிய பரிசோதனைக்கு இதைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். 

டேவிட், பர்க்கரை வாங்கி தன்னுடைய கோட் பாக்கெட்டில் வைத்துள்ளார். பின் அந்த கோட்டினை வேனின் பின்புறத்தில் வைத்துள்ளார். பின்னர் டேவிட்டின் குடும்பமே லோகனிலிருந்து உட்டாவின் ஜெயிண்ட் ஜார்ஜ் நகருக்குச் சென்றது. அந்த கோர்ட் 2 வருடங்கள் வேனிலேயே கிடந்துள்ளது. என் மனைவி கோட்டினை கண்டுபிடித்தார் என்று டேவிட் கூறுகிறார்.

ஊறுகாய் மட்டுமே வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும். ஆனால், இந்த பர்கர் மற்றும் அதன் பன் வருடக்கணக்காக கெடாமல் இருப்பதாக கூறுகிறார்.

பர்கரை 2013 ஆம் ஆண்டில் தனது கோட்டிலிருந்து பர்கரை எடுத்து வைத்து  சமீப காலம் வரை தகர டின்னில் வைத்து பாதுகாத்து வருவதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளீயிட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news


.