சமூக வலைத்தளங்கள் அண்மைக் காலமாக நுகர்வோரைப் பொருட்களை வாங்க வைப்பதில் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. இதில் பிரபலங்களும் முக்கியக் காரணியாக விளங்குகின்றனர்.
நடிகர்கள், மாடல்கள், விளையாட்டு வீரர்கள் முதலிய பிரபலங்கள் இவ்வாறு சமூக ஊடகங்கள் மூலம் பொருட்களை விளம்பரப்படுத்தி நன்றாக கல்லா கட்டி வருகிறார்கள்.
இந்த முறையில் இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரப் பதிவுக்கு எந்தப் பிரபலம் எவ்வளவு வாங்கலாம் என்று கணக்கிட்டு 2018ம் ஆண்டுக்கான பட்டியலை ஹாப்பர் எச்கியூ வெளியிட்டது.
பாலோயர்கள் எண்ணிக்கை, அதிகம் பேர் விருப்பக்குறியிடுவது, கமெண்ட் செய்வது போன்ற செயல்பாடுகள், ஒவ்வொரு பதிவுக்கும் இடையில் எடுத்துக்கொள்ளப்படும் காலம் ஆகியவற்றை அளவுகோல்களாகக் கொண்டு ஹாப்பர் எச்கியூ இப்பட்டியலைத் தயாரித்துள்ளது.
இதில் கைலி ஜென்னர் முதலிடம் பிடித்துள்ளார். ஒரு பதிவுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் வரை இவரால் பெறமுடியும். கைலி ஜென்னர் உலகம் முழுவதும் பிரபலமான காஸ்மெடிக் தயாரிப்பு நிறுவனத்துக்கும் சொந்தக்காரர் ஆவார். கைலியின் சகோதரி கிம் கர்தஷியான் நான்காவது இடத்தில் உள்ளார்.
சென்ற ஆண்டு இப்பட்டியலில் முதலிடம் பிடித்த பாடகி செலினா கோம்ஸ் இவ்வாண்டு இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் ஒரு பதிவுக்கு 80,000 டாலர்கள் வசூலிக்கலாம்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ, பியான்சே, டிவெய்ன் ஜான்சன் (ராக்), ஜஸ்டின் பீபர் முதலியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற பிரபலங்கள் ஆவர்.
இந்திய கேப்டன் விராட் கோலி இப்பட்டியலில் ஒரு பதிவுக்கு 1,20,000 டாலர்கள் பெறுமதிப்புடன் 17வது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஸ்டீபன் கர்ரி, பிளாய்ன் மேவெதர் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி கோஹ்லி 17வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வீரர்களில் அவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
ஃபோர்ப்ஸ் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி மிக இளம் வயதில் சொந்த உழைப்பில் நூறுகோடிக்கு அதிபதி ஆன அமெரிக்கர் என்னும் சிறப்புநிலையை கைலி ஜென்னர் விரைவில் எட்டிப்பிடிக்க உள்ளார். அவருக்கு இப்போது வயது 20.
Click for more
trending news