This Article is From Jul 01, 2020

எருமையை பயன்படுத்தி இலையைப் பறித்துத் தின்ற கெட்டிக்கார ஆடு… வைரல் வீடியோ!

“மிருகங்கள் நாம் நினைப்பதைவிட மிக சாமர்த்தியசாலிகள்தான்” என்று ஒருவர் சொல்ல, 

எருமையை பயன்படுத்தி இலையைப் பறித்துத் தின்ற கெட்டிக்கார ஆடு… வைரல் வீடியோ!

“தான் சாப்பிட்ட இலைகளில் சிலவற்றை அந்த எருமைக்குப் பகிர்ந்ததளித்ததா ஆடு?” என இன்னொருவர் கேள்வி எழுப்புகிறார். 

பல மிருகங்கள், தங்களுக்குக் கிடைக்கும் ஒரு சில விஷயங்களை வைத்து மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொள்ளும். அப்படியான ஒரு கெட்டிக்கார ஆட்டின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது முன்னரே சமூக வலைதளங்களில் ஒரு ரவுண்டு வந்த வீடியோதான் என்றாலும், ஆட்டின் சிந்தனைத் திறனுக்கும், செயல்பட்ட வேகத்துக்கும் பாராட்டப்பட்டு மீண்டும் வைரலாகி வருகிறது. 

வீடியோவில் ஒரு எருமை, மரத்தில் கயிறு கொண்டு கட்டப்பட்டுள்ளது தெரிகிறது. அருகிலேயே ஒரு வளர்ந்த ஆடு நிற்கிறது. திடீரென்று எருமையின் முதுகு மீது ஏறும் ஆடு, மரத்தின் மீது முன் கால்களை வைத்து, எக்கித் தலையை நீட்டுகிறது. தரையிலிருந்தால் எட்டாத மரத்தின் இலைகள், இப்போது ஆட்டுக்கு எட்டுகிறது. ஆடு நறநறவென இலைகளை கடித்துச் சாப்பிடுவதுடன் வீடியோ முடிகிறது. இந்த ஆட்டின் சாமர்த்தியம் பார்ப்பவர்களை ‘வாவ்' போட வைத்துள்ளது. 

இந்திய வனத் துறை அதிகாரி சுதா ராமன், தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து, ‘அறிவாளி ஆடு' என்று புகழ்ந்துள்ளார். வீடியோவைப் பார்க்க:
 

பல்லாயிரம் லைக்ஸ்களை குவித்துள்ள இந்த வீடியோவுக்கு கீழ், பலரும் ஆட்டைப் பாராட்டி கருத்திட்டு வருகிறார்கள். 

“மிருகங்கள் நாம் நினைப்பதைவிட மிக சாமர்த்தியசாலிகள்தான்” என்று ஒருவர் சொல்ல, 

“தான் சாப்பிட்ட இலைகளில் சிலவற்றை அந்த எருமைக்குப் பகிர்ந்தளித்ததா ஆடு?” என இன்னொருவர் கேள்வி எழுப்புகிறார். 

மிருகங்களின் அறிவைப் பறைசாற்றும் வகையில் இருக்கும் வீடியோ இது ஒன்று மட்டுமல்ல. சமீபத்தில் இந்திய வனத் துறை அதிகாரியான சுசாந்தா நந்தா, தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த வீடியோ ஒன்றில், மாமரத்தின் கிளைகளை உலுக்கி மாங்காய்களை சாப்பிடும் புத்திசாலி யானையின் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ இதோ:
 

Click for more trending news


.