This Article is From Nov 13, 2018

இறந்து போன உரிமையாளரின் வருகைக்காக காத்திருக்கும் நாய்!

நாய் ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வாகன விபத்தில் இறந்துபோன தனது முதலாளிக்காக அதே இடத்தில் சாலையோரமாக காத்திருக்கிறது

இறந்து போன உரிமையாளரின் வருகைக்காக காத்திருக்கும் நாய்!

சீனாவில் நாய் ஒன்று தனது இறந்து போன உரிமையாளர் திரும்பி வருவார் என எண்ணி கண்ணீர் மல்க 80 நாட்களாக காத்திருக்கும் வீடியோ காட்சி உலகம் முழுவதும் வைரல் ஆகியுள்ளது.

சீனாவின் பியர் வீடியோ இணையதளம் வெளியிட்ட அந்த வீடியோவில் , நாய் ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வாகன விபத்தில் இறந்துபோன தனது முதலாளிக்காக அதே இடத்தில் சாலையோரமாக காத்திருக்கிறது.

தன் முதலாளிக்காக காத்திருக்கும் அந்த நாயின் வீடியோ பதிவை கண்ட பலரையும் அது கலங்க வைத்துள்ளது.
 

 
 

"இங்கு வரும் ஓட்டுனர்கள் அந்த நாய்க்கு சிறிது உணவு அளிப்பதுண்டு, ஆனால் நெருங்கி வரும் பொழுது அது தொலைவில் சென்றுவிடும். நாயின் உரிமையாளர் பெண்னுக்கும் அந்த நாய்க்கும் இருக்கின்ற உறவு மிகவும் ஆழ‌மானது, தனது முதலாளி இறந்த பிறகும் அந்த நாய் அப்பெண்ணின் அருகே நின்று அவளை பாதுகாத்து வந்தது.'' என ஓட்டுனர் ஒருவர் பி.பி.சி.-யிடம் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் 10ஆம் நாள் பலரால் இணையத்தில் பகிர‌ப்பட்ட அந்த காட்சி நாய்களிடையே காணப்படும் விசுவாசத்திற்க்கு ஓர் எடுத்துக்காட்டு. சீனாவில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறையல்ல‌. சியாங் சியாங்ங என்ற மற்றொறு நாய் தினமும் தனது முதலாளி, பணிகளை முடித்துவிட்டு வரும் வரை காத்திருக்கிறது.

 

Click for more trending news


.