This Article is From Sep 26, 2019

பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் Optical Illusion… நீங்களும் பாருங்க!

இந்த Optical Illusion எப்படி வேலை செய்கிறது?

பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் Optical Illusion… நீங்களும் பாருங்க!

ஒரு புகைப்படக் கலைஞரால் இந்த நிழற்படம் பகிரப்பட்டுள்ளது. அவரின் இந்த ட்ரிக்கிற்காக பலர் வாவ் சொல்லி வருகின்றனர்

திகில் படங்களில் வருவது போன்ற ஒரு Optical Illusion பலரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்த Optical Illusion-ல் பெண் ஒருவரின் நெகடிவ் புகைப்படம் உள்ளது. அந்தப் புகைப்படத்தின் நடுவில் சில வண்ணப் புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தப் புள்ளிகளை சிறிது நேரம் கண் இமைக்காமல் பார்த்துவிட்டு, உடனே வேறு இடத்தில் படபடவென கண் இமைத்தபடி நோக்கினால், நெகடிவில் இருக்கும் பெண்ணின் நிழற்படம், வண்ணப் படமாக தெரிகிறது. 

மிகவும் அசாத்தியமாக இருக்கிறதல்லவா..? நீங்களே இந்த Optical Illusion-ல் பாருங்கள். கீழே இருக்கும் நிழற்படத்தை 15 முதல் 30 விநாடிகள் பார்த்துவிட்டு, வேறு இடத்தில் படபடவென கண் இமைத்தபடி பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். 

ஒரு புகைப்படக் கலைஞரால் இந்த நிழற்படம் பகிரப்பட்டுள்ளது. அவரின் இந்த ட்ரிக்கிற்காக பலர் வாவ் சொல்லி வருகின்றனர். 

இந்த Optical Illusion எப்படி வேலை செய்கிறது?

டெலிகிராஃப் செய்தி நிறுவனம் அதை விளக்குகிறது. இந்த யுக்தியின் பெயர் ‘நெகடிவ் ஆஃப்டர் இமேஜ்'.

மனிதர்களுக்கு மூன்று வகை வண்ண சேனல்கள் இருக்கும். க்ரேஸ்கேல், சிவப்பு - பச்சை, நீலம் - மஞ்சள் ஆகியவையே அந்த வண்ணச் சேனல்கள். இந்தச் சேனல்கள் மூலம்தான் எந்த இடத்திலும் வண்ணத்தைப் பிரித்து நமது மூளை புரிந்து கொள்கிறது. ஒரு வண்ணத்தை மட்டும் நாம் தொடர்ந்து பார்க்கும்போது, அந்த இடத்தில் இருக்கும் வண்ணச் சேனலின் செயல் நம் மூளையில் அதிகரிக்கும். திடீரென்று நீங்கள் வேறு இடத்தில் நோக்கினால், அந்த வண்ணத்தின் ‘நெகடிவ் ஆஃப்டர் இமேஜ்' தோன்றும். அந்த விதிப்படிதான், நெகடிவ் படம் வண்ணப் படமாக தெரிகிறது. 

மேலே உள்ள நெகடிவ் படத்தின் வண்ணப் படம் இதோ. இதைத்தான் Optical Illusion மூலம் பார்த்திருப்பீர்கள். 
 

Click for more trending news


.