மலை முகட்டில் கட்டப்பட்ட வீடு.
ஆஸ்திரேலியாவின் கட்டிடக்கலை வல்லுநர்கள் மாட்ஸ்கேப் கருத்தியல் படியான கடலின் குன்றின் முகட்டில் ஐந்து மாடி வீட்டினை கட்டியுள்ளனர்.
கடலின் மலை முகட்டில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் 5 மாடி உள்ளன. ஒவ்வொரு மாடிக்கும் செல்வதற்கு படிக்கட்டும் எலெவேட்டரும் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் மாடியில் காரை நிறுத்தி விட்டு பின் வீட்டிற்கு இறங்கி செல்ல முடியும். செங்குத்தான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
கடலை பார்த்து ரசிக்கும் வண்ணம் முற்றிலும் கண்ணாடியால் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. மினிமலான உள்ளரங்க வேலைபாடுகளும் இதில் செய்யப்பட்டுள்ளன என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கடலினை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இருந்து ரசிக்க இந்த விதமான கட்டமைப்புகள் மிகவும் உதவும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Click for more
trending news