Read in English
This Article is From Oct 09, 2018

பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ்!

ரயில்வேயின் உற்பத்தி சார்ந்த தொழிலாளர்களுக்கு 2017-18ஆம் ஆண்டிற்கான 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரயில்வே துறையின் சார்பில் கேட்கப்பட்டிருந்தது.

Advertisement
இந்தியா

ஒரு ஊழியருக்கு ரூ.18,000 போனஸாக வழங்கப்படும்.

New Delhi:

பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு கடந்த 6 வருடங்களைப் போல இந்த வருடமும் 78 நாள் ஊதியத்தை போனஸாக பெறுகிறார்கள்.

2017-18ஆம் ஆண்டிற்கான போனஸாக 78 நாள் ஊதியத்தை வழங்குமாறு ரயில்வே வாரியம் கேட்டுக் கொண்டது. அதன்படி, ரயில்வே துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் ரயில்வே யூனியன் நடத்திய பேச்சு வாரத்தையில் இதற்கு அரசு ஒப்புதல் அறிவித்ததாக அதிகாரிகள் ஐ.ஏ.என்.எஸ்க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்கள்.

உற்பத்தி சார்ந்த 12.26 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு வருடம் தோறும் தசரா கொண்டாட்டம் தொடங்குவதற்கு முன் போனஸ் அளிப்பது வழக்கம். இதில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் அடங்க மாட்டார்கள்.

Advertisement