This Article is From Mar 18, 2020

கொரோனா பற்றி நடனமாடி விழிப்புணர்வு செய்த கேரள போலீஸ் - வைரலாகும் வீடியோ!

கேரளாவில் 24 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பற்றி நடனமாடி விழிப்புணர்வு செய்த கேரள போலீஸ் - வைரலாகும் வீடியோ!

கடந்த திங்கட்கிழமை மட்டும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க, மக்கள் அடிக்கடி தங்கள் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள மாநில காவல் துறை, ஒரு டான்ஸ் வீடியோவை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இது குறித்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். எப்படி கை கழுவ வேண்டும் என்று ஒருவர் சொல்ல, அதற்கு ஏற்றது போல ஒரு போலீஸ் குழு வீடியோவில் நடனமாடுகிறது. 

கொரோனா வைரஸ் என்பது, பாதிக்கப்பட்ட நபர் இருமினாலோ தும்மினாலோ, அதிலிருந்து எளிதாகப் பரவிவிடும். இதனால், மற்றவர்களிடத்திலிருந்து தள்ளியிருத்தல், அடிக்கடி கை கழுவுதல், முகத்திற்கு அருகே கைகளைக் கொண்டு போகாமல் இருத்தல் உள்ளிட்டவற்றைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறை சொல்லி வருகிறது. 

இந்நிலையில் கேரள போலீஸின், ‘கை கழுவுதல்' குறித்தான விழிப்புணர்வு வீடியோ, செவ்வாய்க் கிழமை பகிரப்பட்டுள்ளது. 1.04 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், எப்படி கை கழுவ வேண்டும் என்பது குறித்து நடனமாடியபடி விளக்குகிறது போலீஸ் குழு.

வைரல் வீடியோவைப் பார்க்க:


இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டதிலிருந்து 8 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. 28,000 முறை பகிரப்பட்டுள்ளது. 2,000-க்கும் அதிகமான பாராட்டுக் கருத்துகளும் வந்துள்ளன.

வீடியோவுக்கு, “நமக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் பாடம் புகட்டும் வகையிலும் இருக்கிறது,” என்கிறார் ஒருவர். இன்னொருவரோ, “நன்றாக நடனம் ஆடியுள்ளனர்,” என்று புகழ்கின்றார். மூன்றாமவரோ, “நல்ல முயற்சி,” என்கிறார். 

கேரளாவில் 24 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை மட்டும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

Click for more trending news


.