This Article is From Aug 08, 2019

24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ… 60 ஆண்டு கால சாதனை!

“யாருடைய ரத்தமும் மிகவும் முக்கியம்தான். ஆனால் ஹாரிசனின் ரத்தம் என்பது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது”

24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ… 60 ஆண்டு கால சாதனை!

ஹாரிசனின் ரத்தத்தில் மிகவும் விசேஷமான நோய் எரித்து சக்தி இருப்பதாக சி.என்.என் செய்தி நிறுவனம் கூறுகிறது

ஜேம்ஸ் ஹாரிசன், கடந்த 60 ஆண்டுகளாக கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ரத்த தானம் செய்துள்ளார். ‘தங்க கரம் கொண்டவர்' என்றழைக்கப்படும் ஹாரிசன், 24 லட்சம் ஆஸ்திரேலிய குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். 

ஹாரிசனின் ரத்தத்தில் மிகவும் விசேஷமான நோய் எரித்து சக்தி இருப்பதாக சி.என்.என் செய்தி நிறுவனம் கூறுகிறது. இதனால் ஆன்டி-டி என்கிற சிறப்பு மருந்தையும் மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த மருந்து ரீசஸ் நோய்க்கு எதிராக போராட உதவியாக இருக்கிறதாம். 

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின்படி, ரீசஸ் நோய் என்பது, கர்ப்பிணிப் பெண்ணின் ஆன்டிபாடிஸ் (antibodies), அந்தப் பெண்ணின் சிசுவின் ரத்த அணுக்களை பாதிக்குமாம். இதன் மூலம் சிசுவிற்கு மூளை பாதிப்பு அல்லது இறப்பு கூட நேரலாம் என்று சொல்லப்படுகிறது. 

இந்த நோய்க்கு எதிரான மருந்தை உருவாக்க ஹாரிசனின் ரத்தத்தை எடுக்கின்றனர் மருத்துவர்கள். அவரின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை மட்டும் எடுத்துக் கொண்டு, ரத்த அணுக்களை மீண்டும் அவரது உடலிலேயே செலுத்தி விடுவார்களாம். இதனால்தான் ஹாரிசன் அடிக்கடி ரத்த தானம் செய்ய முடிந்ததாம். 

“யாருடைய ரத்தமும் மிகவும் முக்கியம்தான். ஆனால் ஹாரிசனின் ரத்தம் என்பது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது” என்கிறார் ஆஸ்திரேலிய ரெட் கிராஸ் ரத்த சேவையின் ஜெம்மா ஃபால்கன்மைர்.

அவர் மேலும், “அவரது ரத்தம் மூலம் உயிரைக் காக்கும் மருந்து உருவாக்கப்படுகிறது. இதுவரை ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஆன்டி-டி மருநது என்பது ஹாரிசனின் ரத்தத்தில் இருந்தே உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் அவரது ரத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மருந்து தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை 17 சதவிகிதம் ஆகும். அவர் பல லட்சம் உயிர்களைக் காக்க உதவியுள்ளார்” என்று விளக்குகிறார். 


 

Click for more trending news


.