This Article is From Dec 09, 2019

“இது ஒரு போண்டி அரசு…”- போட்டுத் தாக்கும் P Chidambram!

"இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு பெரிய துரோகத்தை மக்களுக்கு இவர்கள் இழைப்பார்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை"- P Chidambaram

“இது ஒரு போண்டி அரசு…”- போட்டுத் தாக்கும் P Chidambram!

"கிராமப்புறமாக இருக்கட்டும் நகர்ப்புறமாக இருக்கட்டும் எங்குமே மக்களுக்கு வாங்கும் திறன் இல்லை. அந்தளவுக்குப் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்டது"

முன்னாள் மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம் (P Chidambram), நாட்டில் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போவதாக குற்றம்சாட்டி, இந்த அரசுக்கு அதைச் சமாளிக்கும் திறன் துளியும் கிடையாது என்று சாடியுள்ளார். 

அவர் மேலும் பேசுகையில், “தொடர்ந்து வெளிவரும் பல புள்ளி விவரங்கள், நாட்டின் பொருளாதார நிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கிராமப்புறமாக இருக்கட்டும் நகர்ப்புறமாக இருக்கட்டும் எங்குமே மக்களுக்கு வாங்கும் திறன் இல்லை. அந்தளவுக்குப் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. 

இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை, மிரட்டி சூறையாடி வாங்கியது மத்திய அரசு. மறுபுறம், கார்ப்பரேட்களுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை வரி தள்ளுபடி செய்தது. நிதிப் பற்றாக்குறை இருப்பதாக சொல்லித்தான் ரிசர்வ் வங்கியிடமிருந்து இவர்கள் பணத்தைப் பெற்றார்கள். ஆனால், அந்தப் பணத்தையும் அவர்கள் மறைமுகமாக கார்ப்பரேட்களுக்குத்தான் கொடுத்தார்கள். இந்த அரசிடம் எந்தப் பணமும் இல்லை. விவசாயிகளுக்கு, நாட்டு மக்களுக்கு நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இந்த அரசிடம் எந்த நிதியும் இல்லை. இது ஒரு போண்டி அரசு.

7 மாதங்களுக்கு முன்னர்தான் இந்த அரசுக்கு மக்கள் மிகப் பெரிய தேர்தல் வெற்றியைக் கொடுத்தார்கள். ஆனால், இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு பெரிய துரோகத்தை மக்களுக்கு இவர்கள் இழைப்பார்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. 

இது ஒரு திறன்றற அரசு என்று நானோ, எதிர்க்கட்சிகளோ சொல்லவில்லை. உலக அளவில் இருக்கும் பொருளாதார வல்லுநர்கள், அரசியல் நோக்கர்கள், இது ஒரு திறன்றற அரசு என்று சொன்னார்கள். அதைத்தான் நாங்கள் கூறகிறோம்,” என்றார். 


 

.