This Article is From Sep 07, 2019

பேன்ஸி நம்பர் பிளேட்டுகளுக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?

திருத்தப்பட்ட கட்டணங்களின் படி, முக்கியமான, கவர்ச்சிகரமான, மிக முக்கியமான மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான எண்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என தெரிகிறது.

பேன்ஸி நம்பர் பிளேட்டுகளுக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?

முன்னதாக பேன்ஸி நம்பர் பிளேட்டுகளுக்கு ரூ.3000 முதல் 20,000 வரை மட்டுமே கட்டணங்கள் இருந்துள்ளது.

Lucknow:

பேன்ஸி வாகன பதிவு எண்களுக்கான விலைகளை உத்தர பிரதேச அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. 

அந்த உயர்த்தப்பட்ட கட்டணங்களின் படி, முக்கியமான, கவர்ச்சிகரமான, மிக முக்கியமான மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான எண்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என தெரிகிறது. 

முன்னதாக பேன்ஸி நம்பர் பிளேட்டுகளுக்கு ரூ.3000 முதல் 20,000 வரை மட்டுமே கட்டணங்கள் இருந்துள்ளது. 

வாகன பதிவு எண் பெயர்வுத்திறனுக்கான விதிகள் உத்தர பிரதேச மாநிலத்தில் தளர்த்தப்பட்டுள்ளன. வணிக மற்றும் வர்த்தக சாராத வாகனங்களுக்கான பதிவு எண்களின் பெயர்வுத்திறனை மாநில அரசு அனுமதித்துள்ளது.

அதன்படி, பெயர்வுத்திறன் வசதியைப் பெறுவதற்கு மூன்று வருடங்களுக்கு வாகனம் வைத்திருப்பதற்கான முந்தைய தேவை இனி பொருந்தாது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாகனங்களுக்கான ஆடம்பர பதிவு எண்களின் மின் ஏலம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பேன்ஸி எண்ணான 0001 ரூ.7.70 லட்சத்திற்கு ஏலத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

.