ஏப்ரல் 2017ன் முதல் வாரத்தில் EHT மூலம் நான்கு கண்டங்களை சேர்ந்த ஆய்வாளர்களுடன் ப்ளாக் ஹோல் ஆராய்ச்சியில் களமிறங்கியது நாசா.
அறிவியல் அறிஞர்கள் ப்ளாக் ஹோலின் முதல் படத்தை படம்பிடித்து வெளியிட்டுள்ளனர். பூமியிலிருந்து 54 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதனை ஈவண்ட் ஹரிசான் டெலஸ்க்கோப் (Event Horizon Telescope) மூலம் படம் பிடித்துள்ளனர். இது 10 ரேடியோ டெலஸ்கோப்புகளை உள்ளடக்கியது.
இந்த புகைப்படத்தில் ஒளிக்கும் , கரும் பகுதிக்கும் உள்ள எல்லை தெளிவாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை திரும்ப வர இயலாத பகுதி என்று குறிப்பிடுகிறார்கள். அந்த பகுதியில் புவி ஈர்ப்பு அதிகமாக இருக்கும் அது அனைத்து விஷயங்களையும் தன்னுள் இழுத்துக் கொள்ளும், என்பது இயற்பியல் விதியாக கூறப்பட்டது.
ஏப்ரல் 2017ன் முதல் வாரத்தில் EHT மூலம் நான்கு கண்டங்களை சேர்ந்த ஆய்வாளர்களுடன் ப்ளாக் ஹோல் ஆராய்ச்சியில் களமிறங்கியது நாசா. இரண்டு ப்ளாக் ஹோல்கள் இலக்காக வைத்து ஆராய்ச்சி துவங்கப்பட்டது. ஒரு பால்வழி அண்டத்தில் உள்ளது. இன்னொன்று எம்87 பகுதியில் உள்ளது. பால்வழி ப்ளாக் ஹோல் இருக்கும் அளவிலேயே தான் எம் 87 ப்ளாக் ஹோலும் அமைந்திருக்கும். ஆனால் அது அதிக தொலைவில் உள்ளது.
இதற்கான பரிசோதனைகளுக்கு பிறகு அதிக தொலைவுக்கு அப்பால் உள்ள அளவீடுகளை கண்டறிய தேவையான தொழில்நுட்ப உதவியை நாடி அவற்றை கோண்டு ஆராய்ச்சியை தொடர்ந்தனர். பல ஆயிரம் சிமுலேஷன்களுக்கு பிறகு அவர்கள் ப்ளாக் ஹோலை கண்டறிந்துள்ளனர்.
இறுதியாக EHT தனது இலக்கை நோக்கி பயணித்தது. இந்த சோதனையில் பக்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்ததாகவும், கால நிலை மாற்றங்கள் பெரிதும் ஒத்துழைப்பு தரவில்லை என்று நாசா அதிகாரி ஒருவர் கூறினார்.
தொடர்ந்து இரவில் 16 மணி நேர தகவல்களெல்லாம் சேகரிக்கப்பட்டும் சோதனைகள் நடத்தப்பட்டன. அதற்காக இங்கு ஆய்வுக்கூடத்தில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளில் 3 மணி நேரம் மட்டுமே தூங்கியுள்ளனர் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
5 இரவுகளுக்கு பிறகு மோசமான வானிலையால ஒரு மெக்ஸிகோ தொலைநோக்கி பழுதடைந்தது. இந்த திட்டத்தில் 50 லட்சம் மெகாபைட் தகவல்கள் திரட்டப்பட்டது. 960 ஹார்ட் டிஸ்க்களுக்கு இணையான தகவல்கள் திரட்டப்படன. 2 பில்லியன் புகைப்படங்கள் அதில் சேமிக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல்களில் ப்ளாக் ஹோலின் படங்களும் இடம் பெற்றன. இதனை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளன்ர். இந்த தகவல்களை ஒருங்கிணைக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் இது ஒரு ப்யானோவில் விடுபட்ட கீ மூலமாக இசைப்பதை போன்று இருந்ததாகவும். அதிலிருந்து கண்டறிந்ததாகவும் கூறினார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)