விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விரும்பியதை ட்ரெண்டாக்கி வருகின்றனர். (courtesy actorvijay)
ஹைலைட்ஸ்
- ட்விட்டரில் Me - Vijay ட் ராண்டாகி வருகிறது.
- விஜயின் பிறந்த நாள் 10 நாள்களில் வரவுள்ளது.
- தன் குடும்ப உறுப்பினர்களுக்கெல்லாம் யாரையும் பிடிக்கும் என்பதை பதிவிட்டு
New Delhi: சமூக வலைதளங்களில் எது எப்போது ட்ரெண்ட்டாகும் என்று கணிக்கவே முடியாது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக காண்ட்ராக்டர் நேசமணி குறித்து ட்ரெண்டானது. ஜாலியாக ஆரம்பித்த ஒரு ஹேஸ்டேக் பல வகையிலும் அரசியல் சார்ந்து மற்றும் பல நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களையும் அதில் சேர்ந்து ட்ரெண்டாக்கி விட்டன.
இன்றும் அதே போல Me - Vijay ட்ரெண்டாகிறது. ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் பலர் இந்த ஹேஸ்டேக்கை ட்ராண்டாக்கி வருகின்றனர். தங்களின் குடும்பத்தில் அம்மா யாருடைய ரசிகர், அப்பா யாருடைய ரசிகர், தங்கை, தம்பி யாருடைய ரசிகர் எனப் பதிவிட்டு வருவது ட்ரெண்டாகி வருகிறது. Me - Vijay ஹேஸ்டேக் போட்டு பதிவிடப்பட்டுள்ள சில ட்விட்டுகளை பார்ப்போமா….
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய்63 படத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜயின் பிறந்த நாளில் 10 நாளில் வரவுள்ள நிலையில் விஜய் ரசிகர் இந்த ட்ரெண்டை விடாமல் செய்து வருகின்றனர்.