This Article is From Jun 09, 2020

‘இப்படித்தான் உங்களை திருத்துவோம்!’- எடப்பாடிக்கு பன்ச் கொடுத்த உதயநிதி!!

இந்த ஆண்டு 10 ஆம் வகுப்புத் தேர்வு நடத்தப்படுவது குறித்து முன்னதாக அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு

Advertisement
தமிழ்நாடு Written by

அந்த அறிவிப்பை இன்று ரத்து செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Highlights

  • 10 ஆம் வகுப்புத் தேர்வு விவகாரத்தில்தான் உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார்
  • முன்னதாக 10 ஆம் வகுப்புத் தேர்வு நடத்தப்படும் என்று சொன்னது அரசு
  • ஆனால், அந்த உத்தரவைத் தற்போது ரத்து செய்துள்ளது தமிழக அரசு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இம்மாதம் 15 ஆம் தேதியிலிருந்து நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம், தேர்வினை தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. மேலும், நோய்த்தொற்று வல்லுநர்கள் குறுகிய காலத்தில் நோய்த் தொற்று குறைய வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய்த் தொற்று வல்லுநர்களின் கருத்துகளையும் கேட்டு, மாணவர்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதிப்பெண்களைப் பொறுத்த அளவில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொண்டு 80 சதவீத மதிப்பெண் மற்றும் வருகைப் பதிவுப் பொறுத்து 20 சதவீத மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பு குறித்து திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளது அரசு. இது, வெற்றி கிடைக்கும்வரை இக்கோரிக்கையை அரசு, நீதிமன்றம், மக்கள் மன்றம் என தொடர்ந்து எடுத்துசென்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், இளைஞரணி-மாணவரணியினருக்கும், ஆசிரியர்-மாணவர்-பெற்றோருக்கும் கிடைத்த வெற்றி. இப்படித்தான் உங்களை திருத்துவோம்” என்று எடப்பாடியின் ட்விட்டர் அக்கவுன்டை டேக் செய்துள்ளார். 

Advertisement