This Article is From Dec 27, 2019

நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியை வதைக்கும் கடும் குளிர்!

Delhi weather: இந்த ஆண்டு டிசம்பரில், வியாழக்கிழமை வரை சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை (MMT) 19.85 டிகிரி செல்சியஸ் ஆகும். இது டிசம்பர் 31க்குள் 19.15 டிகிரி செல்சியஸாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1992க்குப் பிறகு, 1997, 1998, 2003 மற்றும் 2014 ஆகிய நான்கு ஆண்டுகளில் மட்டுமே டெல்லி கடும் குளிர் கொண்டிருந்தது.(Representational)

New Delhi:

டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் தொடர்ந்து குளிர் நிலவி வரும் நிலையில், 1901ஆம் ஆண்டிற்கு பின்னர் டெல்லி அதன் இரண்டாவது அதிகபட்ச குளிர் நிலையை டிசம்பர் மாதத்தில் பதிவு செய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "டிசம்பர் மாதத்தில் சராசரி வெப்பநிலையானது 1919, 1929, 1961 மற்றும் 1997ஆம் ஆண்டுகளில் மட்டுமே 20 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருந்தது" என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு டிசம்பரில், வியாழக்கிழமை வரை சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை (MMT) 19.85 டிகிரி செல்சியஸ் ஆகும். இது டிசம்பர் 31க்குள் 19.15 டிகிரி செல்சியஸாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை அதுபோன்று குளிர் நிலவினால், இது 1901ம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது குளிரான டிசம்பராக இருக்கும். டிசம்பர் 1997ல் மிகக் குறைந்த (MMT) 17.3 டிகிரி செல்சியஸாகப் பதிவு செய்தது" என்று அவர் கூறினார்.

டெல்லிக்கு அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை வழங்கும் சஃப்தர்ஜங் ஆய்வகம், டிசம்பர் 18 அன்று மிகக் குறைந்த அதிகபட்ச வெப்பநிலை 12.2 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்தது.

பாலம் பகுதியில் உள்ள வானிலை நிலையம் டிசம்பர் 25 ஆம் தேதி மிகக் குறைந்த அதிகபட்சமாக 11.4 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்தது.

டிசம்பர் 14ம் தேதி முதல், நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் தொடர்ச்சியாக 13 நாட்கள் கடும் குளிரை கண்டது. கடைசியாக 1997 டிசம்பரிலே இதுபோன்ற ஒரு கடும் குளிர் நிலை காணப்பட்டுள்ளது. 

1992க்குப் பிறகு, 1997, 1998, 2003 மற்றும் 2014 ஆகிய நான்கு ஆண்டுகளில் மட்டுமே டெல்லி கடும் குளிர் கொண்டிருந்தது.

டிச.29 வரை இந்த கடும் குளிர் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அடுத்த வாரம் குளிர் குறையும் என தெரிகிறது. 
 

.