ஹைலைட்ஸ்
- பேரிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் இரத்த சர்க்கரையை குறைக்கிறது.
- பேரிக்காயில் நீர்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைக்கவும் சாப்பிடலாம்.
- பேரிக்காயின் தோல் நீக்காமல் சாப்பிடலாம்.
அன்றாட வாழ்வை பாதிக்கக்கூடியது நீரிழிவு நோய். உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றலாம். இயற்கை உணவுகளின் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை பேரிக்காய்க்கு உண்டு. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பேரிக்காயை சாப்பிடுவதால் உடல் எடையும் குறைகிறது. பேரிக்காயின் மேலும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவே சிறந்தது. ஒரு பேரிக்காயில் 6 கிராம் அளவு நார்ச்சத்து இருக்கிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. மேலும் நீண்ட நேரத்திற்கு நிறைவாக உணர செய்வதால் பசி உணர்வு குறைந்து உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.
பேரிக்காயில் க்ளைசமிக் இண்டெக்ஸ் அளவு மிகவும் குறைவாக உள்ளது. தினசரி பேரிக்காயை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கிறது. பேரிக்காயின் தோல் பகுதியில் பினாலிக் என்னும் பொருள் அதிகமாக இருக்கிறது. இது உடலில் ஆல்ஃபா அமிலேஸ் மற்றும் ஆல்ஃபா க்ளுக்கோசைடேஸ் அளவை குறைக்க உதவுகிறது.
பசிக்கும்போது துரித உணவுகளை சாப்பிடாமல் ஏதேனும் பழங்களை சாப்பிடலாம். நாள் ஒன்றிற்கு இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வரலாம். இதனால் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானம் சிறப்பாக இருக்கும். பேரிக்காயில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க இனி அடிக்கடி பேரிக்காய் சாப்பிடுங்கள்.