Pomegranate Slicing Hack- தங்களது இணைய பக்கங்களிலும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
Pomegranate Slicing Hack- உணவைச் சமைப்பதற்கும், உணவை தயார் செய்வதற்கும் இணையத்தில் பல டிப்ஸ்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில, நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும் அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அப்படி ஒன்றுதான், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் மாதுளம்பழத்தை உரிக்கும் வீடியோ.
தற்போது வைரலாகியிருக்கும் வீடியோவில், ஒரு நபர் கிளையில் இருக்கும் பழுத்துத் தொங்கும் மாதுளம்பழத்தின் கீழ் பகுதியை சீவுகிறார். பின்னர், உள்ளே இருக்கும் துவர்ப்பு மேற்பரப்பின் 6 பரிவுகளிலும் கத்தியால் பிளவு ஏற்படுத்துகிறார். தொடர்ந்து பழத்தை உரிக்கும்போது பிசிறு இல்லாமல் பழம் மட்டும் தனியாக உரிபடுகிறது. அந்த வீடியோவை கீழே பாருங்கள்.
பலரும் இந்த டிரிக்-ஐ வியந்து பாராட்டி வருகின்றனர். தங்களது இணைய பக்கங்களிலும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். சிலரது ரியாக்ஷன்கள் இதோ.
Click for more
trending news