Ho Chi Minh City:
உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்கியதில் இருந்து, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணிகளின் டி ஷர்ட், பூட்ஸ், பேண்ட் என பொருட்களோடு கொண்டாடுகின்றனர். இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் வியட்நாமில், முட்டை ஓடுகளில் உலகக் கோப்பையின் மஸ்கோத்தை வடிவமைத்து தன் பாணியில் உலகக் கோப்பையை கொண்டாடி வருகிறார் கையன் தன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்..
தனது மாணவர்களுக்காக இந்த கலையை 2002-ம் ஆண்டு கற்று கொண்டதாக கூறுகிறார் தன். அப்போதிலிருந்து முட்டை ஓட்டில் உருவங்களை செதுக்குவது அவரது பொழுதுபோக்காக இருந்துள்ளது.
ஓநாய் ஒன்று பந்தை உதைப்பது போலான, உலகக் கோப்பை கால்பந்து 2018 தொடரின் மஸ்கோத் சாபிவிக்காவை முட்டையில் செதுக்கியுள்ளார். அதுமட்டும் அல்ல மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற பிரபல வீரர்களையும் முட்டை ஓட்டில் செதுக்கி வருகிறார்.
இது பற்றி தன் கூறுகையில் “ முட்டைகளில் செய்யப்படும் இந்த கலைக்கு, மிக ஆழ்ந்த கவனம் தேவை. இதை நான் செய்வதால் என்னுடைய கிரியேட்டிவிட்டி, கவனிக்கும் திறன் அதிகரிக்கிறது. ரிலாக்ஸாக உணருகிறேன் “ என்கிறார்.
2010-ம் ஆண்டு உலகக் கோப்பையின் போதும், மாஸ்கோத்களை இவர் முட்டை ஓட்டில் உருவாக்கியிருக்கிறார். இப்போது அவரது வீட்டில் ஆயிரத்துக்கும் மேலான முட்டை ஓட்டு சிற்பங்கள் இருக்கின்றன. ஓய்வு காலத்தை மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறார் கையன் தன். “ இந்த கலையை நான் என்னுடைய மன நிறைவுக்காக செய்கிறேன், வியாபாரத்துக்காக பயன்படுத்தமாட்டேன்” என்கிறார் தன்.
Click for more
trending news