பாங்காக் நகரத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல முயற்சிகளை அந்நாட்டு அரசு எடுத்துவரும் நிலையில் பாங்காக்கில் உள்ள உயரமான கட்டிடம் என கருதப்படும், கிங் பவர் மாகானக்கோனின் மேல் சுமார் 1,030 அடி உயரத்தில் கண்ணாடியால் கட்டப்பட்ட பார்வையாளர் அரங்கம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் மிக உயர அரங்கத்திலிருந்து பாங்காக் நகரத்தை பறவையின் பார்வையிலிருந்து பார்க்க முடியும். மேலும் கிங் பவர் மாகானக்கோன் கட்டத்திலுள்ள 74 மற்றும் 75 வது மாடியில் நகரத்தை பார்க்கும் வகையில் அட்டகாசமான பார் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாரின் தனித்துவமே இதன் கண்ணாடி தளங்கள்தான். அதன் மூலம் பாங்காக் நகரத்தை 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும். மேலும் அந்த தளத்தில் நடப்பதற்க்கு முன்னர் பாதுகாப்புக்காக காலனிகளுக்கு ஏற்ற துணிகளால் ஆன காலுரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன்னரே திறக்கப்பட்ட இந்த ஸ்கை வாக் (sky walk) இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்தக் கண்ணாடி தரையில் இருப்பது போல் பல புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கவர்ந்து வருகிறது.
மேலும் சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணத்தில் இருக்கும் கண்ணாடிப்பாலம் மக்கள் அதன் மீது நடக்கும் போது கண்ணாடி விரிசல் விழுவது போன்ற சத்தத்திற்கு மிகவும் பிரபலம்.
Click for more
trending news