Read in English
This Article is From Aug 13, 2018

இந்துக் கடவுள் லக்‌ஷ்மியின் பெயரில் அமைந்த ஜப்பான் நகரம்

500 க்கும் மேற்பட்ட ஜப்பானியச் சொற்களின் வேர்களை சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் காணலாம்

Advertisement
இந்தியா

ஜப்பான் தலைநகர் டோக்யோவுக்கு அருகில் உள்ள கிச்சிஜோய் என்னும் நகரம் இந்துக் கடவுள் லக்‌ஷ்மியின் பெயரில் அமைந்த நகரம் ஆகும்

Bengaluru:

ஜப்பான் துணைத்தூதரக அலுவலர் தகாயுகி கித்தகவா பெங்களூரில் நேற்று நடந்த தயானந்த் சாகர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், 'ஜப்பான் தலைநகர் டோக்யோவுக்கு அருகில் உள்ள கிச்சிஜோய் என்னும் நகரம் விஷ்ணுவின் துணையான இந்துக் கடவுள் லக்‌ஷ்மியின் பெயரில் அமைந்த நகரம் ஆகும்' என்ற ஆச்சரியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். 

"பலர் இந்தியாவும் ஜப்பானும் முற்றிலும் வேறு வேறானவை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. இந்தியப் பண்பாட்டின் தாக்கம் ஜப்பானில் நிறையவே உள்ளது. ஜப்பானில் பல இடங்களிலும் இந்துக் கடவுள்களுக்குக் கோயில்கள் அமைந்துள்ளன. பல நூற்றாண்டுகளாக எமது மக்கள் அக்கடவுளர்களை வணங்கிப் போற்றிவருகிறார்கள்" என்று பேசிய அவர், தனது உரையின் தொடக்கத்தில் சில வரிகளை கன்னடத்தில் பேசி பார்வையாளர்களை வியப்புக்குள்ளாக்கினார். 

மேலும் ஜப்பானிய மொழிமீதும் இந்தியத் தாக்கம் உள்ளது என்று குறிப்பிட்ட அவர் பல ஜப்பானிய சொற்கள் சமஸ்கிருத, தமிழ் வேர்களைக் கொண்டவை என்றும் கூறினார். இதற்கு எடுத்துக்காட்டாக அவர், "சோறு, வினிகரைக் கலந்து செய்யும் ஜப்பானிய உணவான சூஷியானது ஷாரி என்பதில் இருந்து உருவானது. இதன் மூலம் சாலி என்னும் சமஸ்கிருதச் சொல்லே ஆகும். சாலி என்றால் சமஸ்கிருதத்தில் அரிசி என்று பொருள். இதுபோல ஏறத்தாழ 500 ஜப்பானியச் சொற்களின் வேர்களை சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் காணலாம்" என்று கூறினார். 

Advertisement

இத்தனியார் கல்லூரிக் குழுமம் தனது மாணவர்களுக்கு ஜப்பானிய மொழியைப் பயிற்றுவிக்க ஜப்பான் நாட்டு அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement