“இது வெறும் கருப்பு - வெள்ளைப் புகைப்படம்தான். அதன் மீதுதான் வண்ணக் கோடுகள் இருக்கின்றன” என்று பேஜ், படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் அடிக்கடி வைரலாகும் சில ஒளியியல் மாயைகள் (ஆப்டிக்கல் இல்யூஷன்), நமது கண்கள் மீது நாமே சந்தேகம் கொள்ளும்படி எண்ணத்தை மாற்றும். அதேபோல இந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு மாயை, உலகம் முழுவதும் இருக்கும் பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ட்விட்டர் தளத்தில் லியோனல் பேஜ் என்பவரால், கடந்த சனிக்கிழமை ஒரு மாயை போஸ்ட் செய்யப்பட்டது. அந்த மாயையில், சிலர் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது தெரிகிறது. உண்மையில் அந்த படம் கருப்பு - வெள்ளை நிறத்தை மட்டுமே கொண்டுள்ளதாம். ஆனால், அதன் மீது பல வண்ணங்களில் கோடு போடப்பட்டுள்ளது.
“இது வெறும் கருப்பு - வெள்ளைப் புகைப்படம்தான். அதன் மீதுதான் வண்ணக் கோடுகள் இருக்கின்றன” என்று பேஜ், படத்துடன் பதிவிட்டுள்ளார்.
நீங்களே அந்த மாயைப் படத்தை ஒரு முறை பாருங்கள்:
உங்களுக்கு இந்தப் படம், வண்ணமாக தெரிகிறதா? அது ஏனென்றால், வண்ணக் கோடுகளால்தான் எனப்படுகிறது. அந்த கோடுகள் இருப்பதனால், உங்கள் மூளை, இதை ஒரு வண்ணப் படமாகவே பார்க்கிறது.
பலரை இந்த மாயை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், சிலரோ, ‘இது உண்மையில் கருப்பு-வெள்ளைப் படம் இல்லை. படத்தில் இருக்கும் வண்ணத்தின் அளவுதான் குறைக்கப்பட்டுள்ளது' என்று கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
Click for more
trending news