படத்தைப் பார்த்தால், ஒரு மாலைப் பொழுதில் அலைகள் ததும்பும் கடற்கரை இருப்பது போன்று தெரியும்
இணையப் பயன்பாடு என்பது பரவலானதில் இருந்து, பல விசித்திரமான விஷயங்கள் வைராவதைப் பார்த்து வருகிறோம். தற்போது அப்படியொரு வைரல் புகைப்படம், இணையத்தைக் கலக்கி வருகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்தால், ஒரு மாலைப் பொழுதில் அலைகள் ததும்பும் கடற்கரை இருப்பது போன்று தெரியும். ஆனால், அது கடற்கரை இல்லை என்பதுதான் விஷயமே.
இந்தப் படத்தை ட்வீட்டிய ஒருவர், ‘இந்தப் படத்தில் கடற்கரை, மேகம், நட்சத்திரங்களை உங்களால் பார்க்க முடிகிறதா. நீங்கள் ஒரு கலைஞர்தான்' என்றார். அவரே தொடர்ந்து, அது ஒரு உடைந்த கார் கதவின் படம் என்ற ரகசியத்தைப் போட்டுடைத்தார்.
அந்தப் படத்தை நீங்களே கீழே பாருங்க:
இந்த வைரல் புகைப்படத்தைப் பகிர்ந்து வரும் இணையவாசிகள் பலர், “எனக்கு கார் கதவு தெரியவில்லையே. பல மணி நேரங்களாக இந்தப் படத்தைத் தான் உற்றுப் பார்த்து வருகிறேன்” என்கிறார்கள். உங்களுக்கு கார் கதவு தெரியவில்லை என்றால், ஆச்சரியப்பட வேண்டாம், நீங்கள் தனியாக இல்லை. பலருக்கும் தெரியவில்லையாம்.
சில பயனர்களோ, படத்தைப் பகிர்ந்து, கேலி செய்யும் வகையில் ட்வீட்டுகளை இட்டு வருகின்றனர்.
Click for more
trending news