This Article is From Nov 20, 2019

“பதறுகளுக்கெல்லாம் பதில் சொல்வதா..?”- காயத்ரி ரகுராமை மறைமுகமாக சாடிய திருமா!

Thirumavalavan's reply to Gayathri Raghuram - 'அந்த மாதிரியான பதறுகளுக்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை'

“பதறுகளுக்கெல்லாம் பதில் சொல்வதா..?”- காயத்ரி ரகுராமை மறைமுகமாக சாடிய திருமா!

Thirumavalavan's reply to Gayathri Raghuram - 'அதற்கு செவி மடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்'

Thirumavalavan's reply to Gayathri Raghuram - சமீபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) தலைவர் தொல்.திருமாவளவன் (Thol.Thirumavalavan), இந்து கடவுள்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை முன்வைத்து பிக் பாஸ் (Bigg Boss) புகழ் நடிகை, காயத்ரி ரகுராம் (Gayathri Raghuram), திருமாவளவனை கறாரான வகையில் விமர்சித்தார். திருமாவளவனை விமர்சித்து அவர் இட்ட சில ட்விட்டர் பதிவுகள், அவதூறு கிளப்பும் வகையில் இருந்தன. இதன் காரணத்தால் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. 

தொடர்ந்து பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள், திருமாவளவனின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக காயத்ரி ரகுராம், “திருமாவளவன் போன்ற ஆட்களை அடக்குவதற்கு அய்யா மருத்துவர். ராமதாஸ்தான் சரியான ஆள்,” எனப் பதிவிட்டது சர்ச்சையை மேலும் பெரிதாக்கியது. 

knchkp2o

இதற்கிடையில் திருமா, “என்னைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் அரசியல் களத்தில் எதிர்க்க வேண்டியது மோடி போன்ற பெரிய சக்திகளைத்தான். சிலர் அரசியல் உள்நோக்கம் கொண்டு நம்மை விமர்சிக்கிறார்கள். அந்த மாதிரியான பதறுகளுக்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நான் ஆற்றிய மொத்த உரையைக் கேட்காமல், நான் சொன்ன 10 நொடிக் கருத்தை வெட்டி, மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டி என் மீது வெறுப்புணர்வைத் தூண்ட முயற்சி நடந்து வருகிறது. அதற்கு செவி மடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்,” என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்த விவகாரம் பற்றி இயக்குநர் பா.இரஞ்சித், ‘ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள், தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது. அண்ணன் திருமா அவர்களை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும்  ஈடேறபோவதில்லை,' என்றுள்ளார்.
 

.