This Article is From Nov 22, 2019

“Kamal-Rajini கூட்டணி நாட்டுப் பிரச்னைக்காக அல்ல… தனிப்பட்ட பிரச்னைக்காக…”- திருமா அதிரடி!

“ரஜினியும் கமலும் இணைந்து செயல்பட உள்ளதாகக் கூறியுள்ளது நாட்டின் நலனிற்காக அல்ல"

“Kamal-Rajini கூட்டணி நாட்டுப் பிரச்னைக்காக அல்ல… தனிப்பட்ட பிரச்னைக்காக…”- திருமா அதிரடி!

"தங்களின் தனிப்பட்ட பிரச்னைக்காகவே அவர்கள் இணைய உள்ளனர்"

அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு வரும் கமல்ஹாசனும் (Kamal Haasan), கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தும் (Rajinikanth), இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இருவரும் அரசியல் களத்தில் ‘சூழல் அமைந்தால் நாட்டிற்காக' இணைந்து செயல்படுவோம் என்பதை உறுதிபட தெரிவித்துள்ளனர். இதனால், சட்டமன்றத் தேர்தலின்போது கமல் - ரஜினி கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து களத்தில் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் (Thol.Thirumavalavan), “கமலும் ரஜினியும் இணைந்து பணியாற்றுவது நாட்டு பிரச்னைக்காகவோ, நலனுக்காவோ அல்ல,” என அதிரடி கருத்தைத் தெரிவித்தார். 

kamal haasan rajinikanth cauvery pti

இன்று சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமா, “நான் இந்து மதத்திற்கு எதிராக பேசிவிட்டதாக தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. அது குறித்து விளக்கம் அளித்த பின்னரும் தொடர்ந்து சிலர் திட்டமிட்டு அரசியல் செய்து வருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் வருவதையொட்டி, எனக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையிலும், திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் இப்படி நடந்து கொள்கிறார்கள். 

நான் ஜனநாயகத்துக்ம சனாதனத்துக்கும் இருக்கும் வேறுபாட்டின் அடிப்படையில் அப்படிப் பேசினேன். ஜனநாயகத்துக்கு ஆதரவாக நான் பேசியதை பலர் திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்,” என்றார்.

தொடர்ந்து ரஜினி - கமல் இணைப்பு குறித்துப் பேசிய திருமா, “ரஜினியும் கமலும் இணைந்து செயல்பட உள்ளதாகக் கூறியுள்ளது நாட்டின் நலனிற்காக அல்ல. நாட்டின் பிரச்னைக்காக அல்ல. தங்களின் தனிப்பட்ட பிரச்னைக்காகவே அவர்கள் இணைய உள்ளனர்,” எனக் கூறியுள்ளார். 

.