ஜாமினில் வெளியே இருப்பவர்கள் எனக்கு சான்றிதழ் தருகிறார்கள் என ராகுல் குறித்து மோடி கடும் தாக்கு!
New Delhi: ஜாமீனில் உள்ள ராகுலும், சோனியாவும் எவரது நேர்மை குறித்தும் கேள்வி எழுப்பத் தேவையில்லை என பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ராகுலின் கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
நேஷனல் ஹெலார்ட் நிறுவன வழக்கில் ராகுலும், சோனியாவும் பிணையில் உள்ளனர். இந்த நிலையில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளின் நன்மைகள் குறித்தும், இந்த விவகாரத்தில் தொடர்ந்து பிரதமர் மோடி அமைதி காத்து வருவது குறித்தும் தொடர்ந்து அனைத்து மேடைகளிலும் ராகுல் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் இன்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியும், அவரின் தாய் சோனியா காந்தியும் ஜாமீனில் இருக்கும் நிலையில் அவர்கள் எனக்கு நேர்மை சான்றிதழ் வழங்குகின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளின் நன்மைகள் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தான் அவர்கள் ஜாமீன் பெற்று உள்ளார்கள் என்பதை மறந்து என்னை நோக்கி எழுப்பி வருகின்றனர் என கடுமையாக சாடினார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு கடந்த வாரத்துடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன. அப்போது இது குறித்து பேசிய ராகுல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது வரலாற்று பிழை என்று குறிப்பிட்டார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை விளைவுகளிலிருந்து இன்னும் மக்களால் மீண்டு வர முடியவில்லை என்றும் இது, இது "கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கான மோசடி என்றும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் வடுக்கள் "காலப்போக்கில் இன்னும் அதிகமாகக் காணப்படுகின்றன" என கூறியிருந்தார்.