This Article is From Dec 31, 2019

“கோலம் போடுறவங்களைப் பார்த்தா குடும்ப தலைவி மாதிரி இல்ல…”- தமிழக அமைச்சர் சர்ச்சை கருத்து!

Kolam Protest - "சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக கோலம் போடும் பெண்களைப் பார்த்தால் குடும்பத் தலைவிகள் போல் இல்லை"

Advertisement
தமிழ்நாடு Written by

Kolam Protest - முன்னதாக சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை, பெசன்ட் நகரில் சிலர் கோலம் போட்டனர்.

Kolam Protest - குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு எதிப்புப் தெரிவிக்கும் வகையில் தமிழக எதிர்க்கட்சியான திமுக, புதிய பிரசார யுக்தியை கையிலெடுத்தது. தங்களது வீட்டில் “NO CAA, NO NRC” என்ற வாசகங்கள் கொண்ட கோலங்களைப் போட்டு திமுகவினர் பரப்புரையில் ஈடுபட்டனர்.

முன்னதாக சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை, பெசன்ட் நகரில் சிலர் கோலம் போட்டனர். அவர்களில் 6 பேர் மீது தமிழக அரசு வழக்கு போட்டதைத் தொடர்ந்து ‘கோலம் போராட்டம்' விஸ்வரூபம் எடுத்தது. 

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர். ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது. எடப்பாடி அரசுக்கு நன்றி' என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இப்படிப்பட்ட சூழலில் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கோலம் போராட்டம் பற்றி பேசுகையில், “கோலம் என்பது மங்களத்துக்கான வெளிப்பாடு. அதை எதிர்ப்பின் வெளிப்பாடாக காட்டுவது சரியல்ல. அதுமட்டுமல்லாமல், சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக கோலம் போடும் பெண்களைப் பார்த்தால் குடும்பத் தலைவிகள் போல் இல்லை. 

Advertisement

திமுகவின் முக்கியப் புள்ளியான கனிமொழியே, திமுகவினர் அனைவரும் தங்களின் வீட்டுக்கு முன்னால் கோலம் போட்டு சிஏஏ, என்ஆர்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அவர்களின் கட்சியைச் சேர்ந்த 2 விழுக்காடு உறுப்பினர்கள் கூட அதை பின்பற்றியதாக தெரியவில்லை. அதிலேயே தெரிகிறது சிஏஏ, என்ஆர்சிக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை என்பது. திமுக, சிஏஏவுக்கு எதிராக நடத்தும் போராட்டங்கள், காண்பிக்கும் எதிர்ப்புகள் தேவையற்றவை என்றுதான் நினைக்கிறேன்,” என்று சர்ச்சை கருத்துகளை கூறியுள்ளார். 


 

Advertisement