Read in English বাংলায় পড়ুন
This Article is From Nov 11, 2018

’ரத யாத்திரையை நிறுத்தினால் தலை நசுக்கப்படும்!’- மேற்கு வங்க பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

அந்த ரதத்துக்குக் கீழேயே அவர்களது தலை நசுக்கப்படும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா

பாஜக, மேற்கு வங்கத்தில் வரும் டிசம்பர் 5, 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் மூன்று ரத யாத்திரையை நடத்தத் திட்டம் போட்டுள்ளது

Madla, West Bengal:

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் லாக்கெட் சாட்டர்ஜி, ‘மாநிலத்தில் நடக்கவுள்ள ரத யாத்திரையை யாராவது நிறுத்தினால், அந்த ரதத்துக்குக் கீழேயே அவர்களது தலை நசுக்கப்படும்' என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு பலத்தக் கண்டனம் எழுந்துள்ளது.

பாஜக, மேற்கு வங்கத்தில் வரும் டிசம்பர் 5, 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் மூன்று ரத யாத்திரையை நடத்தத் திட்டம் போட்டுள்ளது. 42 லோக்சபா தொகுதிகளுக்கும் இந்த ரத யாத்திரை செல்லும். இதற்கான பயணத்தை பாஜக தலைவர் அமித்ஷா தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது. ரத யாத்திரை பயணத்தை முடிக்கும் போது, மாபெரும் பேரணி நடத்தவும் அதில் பிரதமர் மோடியை பேச வைக்கவும் திட்டமிட்டுள்ளது பாஜக.

இந்நிலையில் தான் மேற்கு வங்க பாஜக-வின் பெண்கள் பிரிவு தலைவர் சாட்டர்ஜி, ‘ரத யாத்திரையின் முக்கிய நோக்கம், மாநிலத்தில் ஜனநாயகத்தை மீண்டும் நிலை நாட்டுவது தான். நாங்கள் முன்னரே சொன்னது போல, யாராவது ரத யாத்திரையை நிறுத்த நினைத்தார்கள் என்றால், அவர்களின் தலை ரதத்திற்குக் கீழேயே வைத்து நசுக்கப்படும்' என்று பேசினார்.

Advertisement

இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி, ‘சமூகங்களைப் பிரித்து ஆதாயம் தேடுவது தான் பாஜக-வின் நோக்கம். ஆனால், மேற்கு வங்க மக்கள் பாஜக குறித்து நன்கு புரிந்தவர்கள். அவர்கள் பிரித்தாலும் அரசியலுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள்' என்று தெரிவித்துள்ளார்.d

Advertisement