ஹைலைட்ஸ்
- 40 ஆயிரம் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் காணாவில்லை
- பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை
- மதிப்பெண்களின் பதிவு இருப்பதாக கல்வித் துறை அறிவிப்பு
Patna:
பிகாரில் நடந்த மெட்ரிக் தேர்வின், திருத்தப்பட்ட விடைத்தாள்களில், ஆயிரக்கணக்கானவை காணமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, நாளை வெளியாக இருந்த தேர்வு முடிவுகள் ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பீகார் பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கோபால்கன்ச் மாவட்டத்தில் எஸ்.எஸ் பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் இந்த விவகாரம் தொடர்பாக போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
“எஸ்.எஸ். பெண்கள் பள்ளியின், தலைமை ஆசிரியர் பிரமோத் ஶ்ரீவட்சவா, பள்ளியில் 200 பைகளில் வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் விடைத்தாள்கள் காணாமல் போனதாக புகார் கொடுத்தார். பூட்டப்பட்ட பாதுகாப்பான அறையில் இருந்து, வினாத்தாள்கள் காணாமல் போயிருக்கிறது” என்று கோபால்கன்ச் காவல் துறை ஆய்வாளர் கூறியுள்ளார்.
பிரமோத் கொடுத்த புகாரில், பள்ளியின் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் சிலரிடம், விடைத்தாளகளை பாதுகாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை “காணாமல் போன விடைத்தாள்களை மீட்டு, இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்” என்று கூறினார்.
“மாணவர்களின் மதிப்பெண்கள் அனைத்தும், பதிவு செய்து வைக்கப்படுள்ளதால், விடைத்தாள் காணாமல் போன மாணவர்களின் மதிப்பெண்கள் எங்களிடம் பத்திரமாக இருக்கின்றது” என்று கூறியுள்ளது கல்வித் துறை.