Read in English
This Article is From Aug 08, 2019

பூமியின் கடினமான உயிரினங்கள் நிலவில் இருக்கலாம் - அதிர்ச்சி தகவல்!

Creatures Living in Moon: இந்த திகிலூட்டும் உயிர்கள் வேற்றுகிரகவாசிகள் அல்ல, மாறாக டார்டிகிரேட்ஸ் என அழைக்கப்படும் பூமியில் வாழும் நுண்ணியிரிகள்.

Advertisement
விசித்திரம் Edited by

நீர் கரடிகள் அல்லது பாசி பன்றிக்குட்டிகள் என்றும் அழைக்கப்படும் இந்த டார்டிகிரேடுகள் நீர் அல்லது நிலம் என இரண்டிலும் வாழும் திறன் கொண்டவை.

Washington:

Life on Moon: எல்லாவற்றிற்கும் மேலாக சந்திரனில் உயிர் இருக்கலாம்: தீவிர கதிர்வீச்சு, வெப்பம், பிரபஞ்சத்தின் குளிரான வெப்பநிலை என அனைத்தையும் கடந்து பல தசாப்தங்களாக உணவு இல்லாமல் உயிர்வாழக்கூடிய ஆயிரக்கணக்கான கிட்டத்தட்ட அழிக்க முடியாத உயிரினங்கள் நிலவில் வாழக்கூடும்.

இந்த திகிலூட்டும் உயிர்கள் வேற்றுகிரகவாசிகள் அல்ல, மாறாக டார்டிகிரேட்ஸ் என அழைக்கப்படும் பூமியில் வாழும் நுண்ணியிரிகள், ஏப்ரல் மாதம் இஸ்ரேலின் பெரெஷீட் சந்திர மேற்பரப்பில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதை உயிரோடு வெளியேற்றியிருக்கலாம் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

விண்கலத்தின் பாதை மற்றும் நுண்ணிய விலங்குகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சாதனத்தின் அமைப்பு ஆகியவற்றின் ஆய்வின் அடிப்படையில், "டார்டிகிரேட்களுக்கு உயிர்வாழும் வாய்ப்புகள் மிக அதிகம் என்று நாங்கள் நம்புகிறோம் ... அது மிக அதிகம்" என்று ஆர்ச் மிஷன் அறக்கட்டளையின் இணை நிறுவனர் மற்றும் தலைவரான நோவா ஸ்பிவாக், ஏ.எஃப்.பி-க்கு தெரிவித்துள்ளார்.

Advertisement

"டார்டிகிரேடுகள் சேர்க்க உகந்தவை, ஏனென்றால் அவை நுண்ணிய, பல்லுயிர் மற்றும் பூமியின் வாழ்வில் மிகவும் நீடித்த வடிவங்களில் ஒன்றாகும்" என்று ஸ்பிவாக் கூறியுள்ளார்.

டார்டிகிரேடுகள் ஒரு "சந்திர நூலகம்" அதற்குள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, இது ஒரு  நானோ தொழில்நுட்ப சாதனம்.

Advertisement

நீர் கரடிகள் அல்லது பாசி பன்றிக்குட்டிகள் என்றும் அழைக்கப்படும் இந்த டார்டிகிரேடுகள் நீர் அல்லது நிலம் என இரண்டிலும் வாழும் திறன் கொண்டவை. மேலும் அவை 150 டிகிரி செல்சியஸ் (302 டிகிரி பாரன்ஹீட்) மற்றும் மைனஸ் 272 டிகிரி செல்சியஸ் (-458 பாரன்ஹீட்) வரை வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும்திறன் கொண்டவை.

க்ரப் போன்ற, எட்டு கால்கள் கொண்ட இந்த உயிரினங்கள் பல தசாப்தங்களாக உயிரற்று இருந்தாலும் திரும்பி உயிர் பெற்று வரலாம், விண்வெளியில் பூஜ்ஜியத்திற்கு அருகிலுள்ள அழுத்தத்தையும் மரியானா ட்ரென்சின் நொறுக்கும் ஆழத்தையும் தாங்கும் தன்மை கொண்டது.

Advertisement

"ஆனால் சுறுசுறுப்பாக வளர, வளர, சாப்பிட, இனப்பெருக்கம் செய்வதற்கு அவர்களுக்கு தண்ணீர், காற்று மற்றும் உணவு தேவைப்படும். எனவே அவர்கள் இனப்பெருக்கும் செய்து ஒரு கூட்டத்தை உருவாக்க முடியாது" என்று ஸ்பிவாக் மேலும் பேசுகையில் கூறினார்.

நாசா வானியலாளர் காஸ்ஸி கான்லி, அவர்களின் சரியான உயிர்வாழும் நேரம் அந்த இடந்தின் நிலை மற்றும் அங்கு வெளிப்படும் வெப்பநிலையைப் பொறுத்தது என்று கூறினார்.

Advertisement

"அவர்கள் அதிக வெப்பத்திற்கு உள்ளாகாவிட்டால், அவர்கள் நீண்ட காலம் (பல ஆண்டுகள்) உயிர்வாழ முடியும்" என்று அவர் கூறினார்.

"விண்வெளியில் உள்ள நிலைமைகளுக்கு மாறாக, அவற்றை சேமிக்கப் பயன்படுத்தப்படும் எபோக்சி அல்லது பசையிலிருந்து வரும் நச்சு இரசாயனங்களால் இந்த உயிரினங்கள் பாதிக்கப்படலாம் எனத் தான் அதிக வருத்தம் கொள்வதாகவும் அவர் கூறினார்.

Advertisement