Read in English
This Article is From Jul 29, 2019

பாகிஸ்தானில் பிரிவினையின்போது மூடப்பட்ட இந்துக் கோயில் மீண்டும் திறப்பு!!

கோயிலை புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement
உலகம் Edited by

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முயற்சியால் கோயில் திறக்கப்பட்டுள்ளது.

Islamabad:

பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்துக் கோயில் ஒன்று 72 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

தாரோவாலில் உள்ள சவாலா தேஜா சிங் கோயில் சர்தார் தேஜா சிங்கால் கட்டப்பட்டது. இதனை இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தக் கோயில் மூடப்பட்டது. இதன்பின்னர்  இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் 1992-ல் நடந்தபோது சவாலா கோயிலை பாகிஸ்தானியர்கள் சேதப்படுத்தினர். 

இந்த நிலையில் மீண்டும் சவாலா கோயில் திறக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மேற்கொண்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த கோயிலுக்கு செல்ல எப்போதும் அனுமதி அளிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 72 ஆண்டுகள் மூடியே கிடந்ததால் அதனை புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement