ஐஸ்லாந்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மெக்டொனால்ட் உணவு விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டன
ஐஸ்லாந்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மெக்டொனால்ட் உணவு விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டன அப்போது ஒருவர் கடைசியாக பர்கரும் ஃப்ரென்ச் ஃப்ரைஸும் வாங்க முடிவு செய்தார். வாங்கிய பர்கரை தன்னுடைய கடையில் உள்ள சின்ன குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து வருகிறார்.
இந்த வாரத்தோடு இந்த உணவு வாங்கி 10 வருடம் ஆகிறது. ஆனால் இந்த பர்கர் இப்போது வாங்கியது போன்றே ஃபிரஷ்ஷாகவே உள்ளது. இந்த பர்கரை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பர்கரை வாங்கி இன்றளவும் பார்வைக்கு வைத்துள்ள ஜோர்துர் மராசான்
“மெக்டொனால்டு உணவுகள் கெடாது என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதனைக் காணவே வாங்கி வைத்தேன். இந்த உணவு கெட்டுப்போகவில்லை. சுற்றியுள்ள பேப்பர் மட்டுமே பழையதாக இருக்கிறது” என்கிறார்.
தினமும் மக்கள் இந்த பர்கரை பார்வையிட வருகின்றனர். உலகெங்கிலும் உள்ளவர்கள் தினமும் 4,00,000 பேர் இந்த பர்கரை பார்க்கின்றனர். இந்த 10 வருடத்தில், பர்கரும் ஃப்ரென்ச் ஃப்ரைஸும் நிறைய இடங்களில் இருந்துள்ளது.
ஆரம்பக் கட்டத்தில் இந்த பர்கர் ஸ்மராசன் என்பவருடையவாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒரு ப்ளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தது. எவ்வளவு நாட்கள் இந்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதை ஆராயவே அது அங்கு வைக்கப்பட்டிருந்தது.
மூன்று வருடம் கழித்து அதில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டதை கண்டு, அதை அவர் ஐஸ்லாந்து தேசிய அருங்காட்சியகத்திற்கு கொடுத்துள்ளார். ஆனால் அருங்காட்சியகத்தின் நிபுணர் அந்த உணவை பாதுகாக்க போதிய உபகரணங்கள் இல்லாததால் மீண்டும் அதை உரிமையாளரிடம் திருப்பி தந்துள்ளார் என ஸ்னொத்ரா ஹவுஸில் இருப்பவர்கள் கூறுகின்றனர்.
இதைப் பற்றி 2013ல் மெக்டொனால்ட் கூறியபோது, சரியான தட்பவெட்ப சூழலில் எங்கள் உணவும், மற்ற உணவுகளை போல கெட்டுப்போகும். ஆனால் காற்றில் ஈரப்பதம் இல்லாத போது எங்கள் உணவு கெட்டுப்போகாது என்று தெரிவித்திருந்தது.
ஐஸ்லாந்து பல்கலைகழகத்தின் மூத்த பேராசிரியர், இந்த விளக்கத்தை உறுதிபடுத்தினார். ஈரப்பதம் இல்லை என்றால் உணவு காய்ந்துவிடும் என ஏஃப்பியிடம் அவர் கூறினார்.
Click for more
trending news