This Article is From Sep 04, 2018

பிரமிக்க வைக்கும் ‘விமான மீன்கள்’ : வைரல் வீடியோ!

1.3 இன்ச் நீளமுள்ள இந்த மீன்கள் எந்த பாதிப்பும் இன்றி ஏரிக்குள் விழுந்து விடுகின்றன என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

பிரமிக்க வைக்கும் ‘விமான மீன்கள்’ : வைரல் வீடியோ!

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான யூட்டாவில், விமானத்தில் இருந்து ஏரிக்குள் மீன்கள் கொட்டப்படும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

கடல்வாழ் உயிரினங்களின் அமைப்பை சேர்ந்தவர்கள், யூட்டா ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்களை கொட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டு தோறும், யூட்டா மலைப்பகுதிகளில் உள்ள ஏரிகளில் மீன்கள் கொட்டப்படுவது வழக்கமாக நடைப்பெற்று வருகின்றது என்று முன்னணி அறிவியல் இணையதளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 200-க்கும் மேற்பட்ட யூட்டா ஏரிகள் மீன்கள் அற்று போவதை தடுக்க முடிகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

இதனை அடுத்து, கடல்வாழ் உயிரினங்கள் அமைப்பின் சார்பில், ஆயிரக்கணக்கான மீன்கள் விமானத்தில் இருந்து கொட்டப்படும் வீடியோ பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், 1.3 இன்ச் நீளமுள்ள இந்த மீன்கள் எந்த பாதிப்பும் இன்றி ஏரிக்குள் விழுந்து விடுகின்றன என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Click for more trending news


.