This Article is From Mar 28, 2020

டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய தொழிலாளர்கள்! கொரோனா பரவும் அபாயம்!!

இன்றைய சூழலில் நாட்டில் 900-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகளவில் பாதிப்பு 5 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

Advertisement
இந்தியா Posted by (with inputs from ANI)

சொந்த ஊருக்கு செல்ல டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் கூடியுள்ள தொழிலாளர்கள்

Highlights

  • சொந்த ஊருக்கு செல்ல கூலி தொழிலாளிகள் ஆர்வம் காட்டுகின்றனர்
  • டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் குவிந்தனர்
  • மக்கள் கூடியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
New Delhi:

சொந்த ஊருக்கு செல்வதற்காக டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடியுள்ளனர். அவர்கள் சொந்த ஊருக்கு கொரோனாவையும் கொண்டு சென்று விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக Social Distancing எனப்படும் சமூக விலகுதலை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இதன்படி, ஒருவருக்கு ஒருவர் பொது இடங்களில் கூடக் கூடாது. அத்தியாவசிய தேவைக்கு கூடினாலும், ஒருவருக்கொருவர் குறைந்தது 3 அடி இடைவெளி விட்டுத்தான் நிற்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மீறி அனாவசியமாக வெளியே வருவோரை போலீசார் அடி வெளுத்து வருகின்றனர். 

,

இந்த நிலையில்,சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் டெல்லி பேருந்து நிலையத்தில் கூட்டமாக கூடியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்களது வேலையை இழந்தவர்கள். அவர்களிடம் காசு பணம் இல்லாத நிலையில் சொந்த ஊருக்கு செல்ல முடிவு வெடுத்து, பேருந்து நிலையத்தில் கூடியுள்ளனர். 

Advertisement

இன்று காலையில் தொழிலாளர்களை அழைத்து வர 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்திருப்பதாக உத்தரப்பிரதேச அரசும், 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது. 
 

.

இதையடுத்து தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கூடியுள்ளனர். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'வேலையின்மை, எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் காணரமாக லட்சக்கணக்கான சகோதர சகோதரரிகள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது சொந்த வீடுகளுக்கு செல்ல விரும்புகின்றனர். இந்த நெருக்கடியான சூழலில் அவர்களை இவ்வாறு நடத்துவது என்பது அவமானமான செயல். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடல்இல்லை' என்று கூறியுள்ளார். 

Advertisement

இன்றைய சூழலில் நாட்டில் 900-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகளவில் பாதிப்பு 5 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. 
 

Advertisement