இந்த சம்பவத்தில் லோகேஷ் (21) ஓம் (25) ஹிருஷிகேஸ் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
New Delhi: வடகிழக்கு டெல்லியில் உள்ள கஜுரிகாஸில் ஹரியானவைச் சேர்ந்த நடன கலைஞரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்தில் 3 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் 5 நாட்களுக்கு முன்னர் நடந்தது. 20 வயதான பெண் கஜூரி காஸ்க்கு நிகழ்ச்சியிக்கு பங்கேற்க வந்திருந்தார். காஷ்மீர்கேட் ஐஎச்பிடியிலிருந்து ஹரியானவிற்கு பஸ்ஸில் வந்தார். பின் அவரை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி கடத்திச் சென்றதாக காவல்துறையினர் கூறினர்.
பவனாவில் உள்ள தனி வீட்டிற்கு கடத்திச் செல்லப்பட்டு அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை கஜுரி செளக்கில் வைத்து கொலை செய்து அவரின் செல்போனையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் லோகேஷ் (21) ஓம் (25) ஹிருஷிகேஸ் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகூர் தெரிவித்துள்ள்ளார்.