Read in English
This Article is From Jul 31, 2020

சென்னையில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்!

உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி தனது அறிக்கையில், குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு

சென்னையில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்!

Chennai:

சென்னையில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மறைந்த முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்களை சூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்த உத்தரவின்படி, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையமானது, "அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் மெட்ரோ என்பது, "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

இதேபோல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது "புரட்சித் தலைவி டாக்டர்.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி தனது அறிக்கையில், குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

சென்னை மெட்ரோ என்பது நகரத்தின் விரைவான போக்குவரத்து அமைப்பாகும், இது டெல்லி மெட்ரோ மற்றும் ஐதராபாத் மெட்ரோவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய மெட்ரோ அமைப்பாகும். இந்த திட்டத்தின் முதல் கட்டத்தை ஓரளவு முடித்த பின்னர் இந்த அமைப்பு 2015ல் சேவையைத் தொடங்கியது.

Advertisement