This Article is From May 02, 2019

அதிசயமான மூன்று கண் பாம்பு…! வைரலாகும் புகைப்படம்

ஃபேஸ்புக்கில் இந்த பதிவில் 8,000 பேர் கமெண்ட் செய்துள்ளனர். 13,000 பேர் ஷேர் செய்துள்ளனர்.

அதிசயமான மூன்று கண் பாம்பு…! வைரலாகும் புகைப்படம்

மூன்று கண் கொண்ட வினோத பாம்பு

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில் 3 கண்கள் கொண்ட பாம்பினை கண்டுபிடித்துள்ளனர். அதை வடக்கு பகுதி பூங்கா மற்றும்  வனவிலங்குகள் அமைப்பு புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளது. 3 கண் பாம்புவின் புகைப்படம் இணையங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. பிபிசி செய்தி தொகுப்பில், இந்த பாம்பு கார்பெட் பைதான் வகையினை சேர்ந்தது என்றும் மார்ச் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்று பிபிசி தெரிவிக்கிறது. கெடுவாய்ப்பாக இது கண்டறியப்பட்ட்ட சில வாரங்களுக்குள் இறந்து விட்டது. இந்த பாம்பு டார்வின் அர்னெம் நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

எண்டி நியூஸின் ரேங்கர் ரா சாட்டோ, “இந்த பாம்பு நீண்ட காலம் வாழ்ந்துள்ளது. ஆனாலும், கடந்த வாரம் முதல் இந்த பாம்பினை பிழைக்க வைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதற்கு உணவளிக்க  போராடினர்” என்று தெரிவித்தார். வடக்குப் பகுதி  பூங்காகள் மற்றும் வனவிலங்குகளின் அதிகாரி “மூன்றாவது கண் நன்றாக இயங்கியது. இது இயற்கையான மரபணு மாற்றமாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

இந்த பாம்பின் எக்ஸ்ரே விசித்திரமான ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. மூன்றாவது கண் ஒரு மண்டையோட்டின் வழியாக செயல்படும் வண்ணம் இருப்பதாக தெரியவந்துள்ளது. மூன்று கண்களும் பாம்பின் செயல்பாட்டிற்கு உதவி வண்ணம் அமைந்துள்ளது எனக் கண்டறிந்த்துள்ளனர். 

ஃபேஸ்புக்கில் இந்த பதிவில் 8,000 பேர் கமெண்ட் செய்துள்ளனர். 13,000 பேர் ஷேர் செய்துள்ளனர்.

இந்த பாம்பு விசேஷமானது அசாதாரணமான அழகான உயிரினம் என்று கமெண்ட் செய்துள்ளனர். வனவிலங்கு அதிகாரிகள் நிச்சயமாக இது இயற்கையில் நடக்கும் இயல்பான நிகழ்வுதான் என்று கூறுகின்றனர். 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு தலை பாம்பு ஒன்றினை கண்டுபிடித்தனர். 

.

____ Speakers ____

  • Amartya Sen

    Nobel Prize in Economics, 1998

  • Kailash Satyarthi

    Nobel Peace Prize, 2014

  • David Trimble

    Nobel Peace Prize, 1998

  • Venkatraman Ramakrishnan

    Nobel Prize in Chemistry, 2009

  • Leymah Roberta Gbowee

    Nobel Peace Prize, 2011

  • Arthur McDonald

    Nobel Prize in Physics, 2015

____ HIghlights ____

____ tweets ____