This Article is From Jul 30, 2018

பொது தேர்வு எழுதிய மாணவர்கள் பற்றிய டேட்டா திருட்டு - 3 பேர் கைது

தமிழகத்தில் நடந்த பள்ளிப் பொதுத் தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்களின் தகவலை ஆன்லைனில் கசிய விட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Advertisement
தெற்கு Posted by

தமிழகத்தில் நடந்த பள்ளிப் பொதுத் தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்களின் தகவலை ஆன்லைனில் கசிய விட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு தேர்வுகளின் இயக்குநர் வசுந்தராதேவி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தமிழகத்தில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் பற்றிய தகவல்கள் சில தனியார் இணையதளங்கள் மூலம் விற்கப்பட்டதாக கூறியிருந்தார். அந்த தகவல்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரை அடுத்து பிரவீன் சவுத்ரி, வெங்கட்ராவ் என்ற இரண்டு தனியார் நிறுவன உரிமையாளர்களையும், சுதாகர் என்ற வெப் டிசைன் நிறுவன உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இவர்கள் மாணவர்களின் டேட்டாவை திருடியதாகவும், அதை 10 இணையதளங்கள் மூலம் விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. வெங்கட் ராவ் இந்த டேட்டாவை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement