This Article is From May 19, 2020

வெவ்வேறு சாலை விபத்துக்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு: 30 பேர் படுகாயம்!

இந்த சாலை விபத்துகள் நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மாநில எல்லைகளுக்கு யோகி ஆதித்யநாத் சீல் வைக்கும்படி உத்தரவிட்டார். 

வெவ்வேறு சாலை விபத்துக்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு: 30 பேர் படுகாயம்!

வெவ்வேறு சாலை விபத்துக்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு: 30 பேர் படுகாயம்!

ஹைலைட்ஸ்

  • வெவ்வேறு சாலை விபத்துக்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு
  • 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
  • கடந்த 10 நாட்களில் மட்டும் 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
Mahoba, Uttar Pradesh:

உத்தர பிரதேசத்தில் 3 பெண்கள் உட்பட 5 புலம்பெயர் தொழிலாளர்கள் வெவ்வேறு விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும், கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தங்களது சொந்த ஊர் திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்துகளில் 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 

இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு 17க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஓட்டுநர் ஒருவர் அவர்களுக்கு உதவு முன்வந்துள்ளார். தொழிலாளர்கள் அனைவரையும் தனது லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். 

அப்போது, ஜான்சி - மிர்சாப்பூர்  நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது லாரியின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த விபத்துக்குள்ளானது. இதில், 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.  

இதேபோல், லக்னோவில் இருந்து 65 கி.மீ தொலைவில் உள்ள உன்னாவோ அருகே புலம்பெயர் தொழிலாளர்கள் இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இருந்து ஆசாம்கார் நோக்கி சென்ற அவர்களது வாகனம், ஆக்ரா - லக்னோ விரைவுச் சாலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், 23 பேர் வரை காயமடைந்துள்ளனர். 

முன்னதாக, கடந்த சனிக்கிழமை இரண்டு லாரிகள் விபத்துக்குள்ளானதில் 26 புலம்பெயர் தொழிலாளர் உயிரிழந்தனர். 30 பேர் வரை படுகாயமடைந்தனர். இந்த சாலை விபத்துகள் நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மாநில எல்லைகளுக்கு யோகி ஆதித்யநாத் சீல் வைக்கும்படி உத்தரவிட்டார். 

தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகள் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து சைக்கிளிலோ, லாரியிலோ அல்லது நடந்து வருவதை தடுத்து நிறுத்தும்படி யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார். அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கி பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கும் படி கூறியிருந்தார். 

.