Read in English
This Article is From Oct 02, 2018

இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற மூவர்..!

லேசர் துறையில் உருவாக்கிய புதிய கண்டுபிடிப்பின் மூலம் கண் சிகிச்சையை இன்னும் அதிக துல்லியத்துடன் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது

Advertisement
உலகம்

லேசர் இயற்பியல்’ துறையில் சாதித்ததற்காக மூவர் விஞ்ஞானிகள் குழு, நோபல் பரிசை வாங்க உள்ளது

2018 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை, ‘லேசர் இயற்பியல்’ துறையில் சாதித்ததற்காக மூவர் விஞ்ஞானிகள் குழு வாங்க உள்ளது. அவர்கள் லேசர் துறையில் உருவாக்கிய புதிய கண்டுபிடிப்பின் மூலம் கண் சிகிச்சையை இன்னும் அதிக துல்லியத்துடன் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸின் ஜெராரர்டு முரோ, கனடாவின் டோனா ஸ்டிரிக்லேண்டு ஆகியோர் நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.

இதில் முரோ, 74 வயதாகும் பெண் விஞ்ஞானி ஆவார். இயற்பியலுக்கான நோபல் பரிசை வெல்லும் 3வது பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு, கண் சிகிச்சையில் தற்போது பெரிதும் பயன்பட்டு வருகிறது.

கடந்த திங்கள் கிழமை, ஆய்வுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதை, அமெரிக்காவின் ஜேம்ஸ் அல்லிசன் மற்றும் ஜப்பானின் தசூகோ ஹோன்ஜோ ஆகியோர் வென்றனர்.

Advertisement

வேதியலுக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து வெள்ளிக் கிழமை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும். அக்டோபர் 8 அன்று, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.

ஸ்வீடிஷ் அகாடமி, முதன் முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பதை ஓர் ஆண்டுக்குத் தள்ளி வைத்துள்ளது. உலக அளவில் கவனம் ஈர்த்து வரும் #MeToo விவகாரம் மற்றும் நோபல் பரிசுக் குழுக்குள் நிலவிய குழப்பம் ஆகியவையே இந்த தள்ளிவைப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Advertisement