Collierville fire: கால்லியர்வில்லே தீ விபத்து: தெலுங்கானாவை சேர்ந்த ஆரோன் நாயக் 17, ஷாரோன் நாயக் 14 மற்றும் ஜாய் நாயக் 15 உள்ளிட்ட 3 பேரும் உயிரிழந்தனர்
New Delhi: தெலுங்கானாவை சேர்ந்த 3 இந்திய சகோதர சகோதரிகள் அமெரிக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர். அந்த சிறார்களுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பெண்ணுக்கு சொந்தமாக கோலியர்வில்லி பகுதியில் உள்ள வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக இவர்கள் மூவரும் சென்றிருந்தனர்.
ஆரோன் நாயக் (17), ஷாரோன் நாயக் (14) மற்றும் ஜாய் நாயக் (15) மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த காரி கோட்ரியெட் (46) என்ற பெண்ணும் அமெரிக்காவில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். இரவு சுமார் 11 மணியளவில் ஏற்பட்ட மின்சார கசிவால் அந்த வீட்டின் ஒரு பகுதி திடீரென்று தீ பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்து சம்பவம் பிரஞ்சு கேம்ப் டவுண் முகநூல் பதிவு மூலம் தான் தெரியவந்தது. அதில், பாதிரியார் நாயக் மற்றும் அவரது மனைவிக்காக நண்பர்கள் அனைவரும் பிராத்தனை செய்யுங்கள். அவர்கள் தங்களது குழந்தைகளை இந்தியாவில் இருந்து அமெரிக்கா அனுப்பி வைத்திருந்தனர். அந்த சிறார்கள் தற்போது தீ விபத்தால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கடந்த 24-ம் தேதி அந்த வீட்டை அலங்கரிக்கும் வகையில் மின் விளக்குகளை அமைக்கும் வேலையில் அங்கிருந்த 3 பேருடன் தெலுங்கானாவில் இருந்து சென்றுள்ள சிறார்களும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இரவு சுமார் 11 மணியளவில் ஏற்பட்ட மின்சார கசிவால் அந்த வீட்டின் ஒரு பகுதி திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதை அறியாத சிறார்கள் வீட்டை அலங்கரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தீ வீட்டின் நான்கு பக்கங்களையும் சூழ்ந்து கொண்டது.
இதனால் வெளியேற வழியின்றி வீட்டிக்குள் சிக்கிகொண்ட ஆரோன் நாயக் (17), ஷாரோன் நாயக் (14) மற்றும் ஜாய் நாயக் (15) மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த காரி கோட்ரியெட் (46) என்ற பெண்ணும் உயிரிழந்தனர்.