This Article is From Jun 16, 2020

ஜம்மு - காஷ்மீரின் சோபியானில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

Shopian Encounter: காலை 5 மணி அளவில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே நடந்த மோதலில் இந்த என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது.

Advertisement
இந்தியா Posted by

கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையானது காலை 6:30 மணியளவில் முடிந்துள்ளது.

Highlights

  • ஜம்மு - காஷ்மீரின் சோபியானில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
  • கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையானது காலை 6:30 மணியளவில் முடிந்துள்ளது.
  • உயிரிழந்த 3 பேரும் சபீர் அகமது, கம்ரான் சாஹூர் மற்றும் முன்னாப்
Srinagar/ Shopian:

ஜம்மு - காஷ்மீரின் சோபியானில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள சோபியானில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் இன்று காலை 5 மணி அளவில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே நடந்த மோதலில் இந்த என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஜைனாபோராவில் உள்ள சிறப்பு செயல்பாட்டுக் குழுவின் (எஸ்ஓஜி) படையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) 178 பட்டாலியனும் பின்னர் இணைந்தன. கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையானது காலை 6:30 மணியளவில் முடிந்துள்ளது.

இதுதொடர்பாக காஷ்மீர் மண்டல காவல்துறை ட்விட்டர் பதிவில், துர்க்வாங்கம் சோபியான் என்கவுண்டர் அப்டேட்: அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சோதனை நடந்து வருகிறது. இதில், உயிரிழந்த 3 பேரும் சபீர் அகமது, கம்ரான் சாஹூர் மற்றும் முன்னாப் ஆகியோர் என தெரியவந்துள்ளது. 

என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து ஒரு ஐ.என்.எஸ்.ஏ.எஸ் மற்றும் இரண்டு ஏ.கே.47 துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சோதனை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. 

முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவாட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹைதீனை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சோபியானில் நடைபெறும் 4வது என்கவுண்டர் சம்பவம் இதுவாகும். கடந்த ஜூன் 10ம் தேதி நடந்த கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையிலும், சிறப்பு செயல்பாட்டுக் குழுவின் (எஸ்ஓஜி) படையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) பட்டாலியனும் பங்கேற்றது. 
 

Advertisement
Advertisement