வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அதிகாரி இன்று கூறியதாவது,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் ஒருசில இடங்களில் மழையோ, அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இலங்கையை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியிலும், தமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியிலும் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.